#1
பொன்னேதும் பொருள் ஏதும் புகழேதும் வேண்டேன்
நின் பாதம் சரணன்றி
பிரிதேதும் வேண்டேன்
#2
படைப்பை கடந்த பரனே போற்றி
படைப்பில் கலந்த பதியே போற்றி
#3.
அருட்பெரும் சுடரே தனி பெரும் கருணையே இயேசுவே நீ வருக 2
1. மண்ணிருள் நீக்கிட விண்ணொளி ஈந்திட
2. பகைமையை ஒழித்திட
பாசத்தை வளர்த்திட
3. வறுமையை ஒழித்திட
வளமையை ஈந்திட
4. தீமையை நீக்கிட
நன்மையை வளர்த்திட
#4.
மங்கல நிலவே மழலை செல்வமே எங்களுக்காக பிறந்த தெயவமே
1. நிலைப் பெறும் தந்தையின் தனிப்பெரும் மைந்தனே மலரினும் அழகிய மரியின் செல்வனே
2. தந்தையின் ஞானம் தங்கிய வடிவே தாயின் தூய்மயை தாங்கிய திருவே
3. ஆண்டவர் பேரொளி அமைந்த முல்லையே அருள்மிகு அன்னையை படைத்த பிள்ளையே
4. தந்தை தந்த நல்வரமான மணியே தாய் மரி வழங்கிய பரிசான கனியே
5. மனிதரை மீட்டிட மனிதனாய் பிறந்தனே மாட்டுக்கொட்டிலில் மகிழ்வுடன் தவழ்ந்தனே
6. உலகின் வழி ஒரு வடிவம் எடுத்தனே உன்னையே வழியென உலகிற்கு கொடுத்தனே
#5.
மனமே ஆண்டவரை போற்று
தினமே ஆண்டவரை போற்று
சோதனை உன்னை தொடர்கையிலே... ஆண்ட...
வேதனையில் நீ வாழ் கையிலே...ஆண்ட..
கவலையில் நீயும் அழுகையிலே....
கண்ணீரில் நீ கரைகையிலே..
உலகம் உன்னை பகைக்கையிலே....
ஊரார் உன்னை வெறுக்கையிலே...
#6.
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு (2)
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே (2)
எவ்வேளையும் ஐயா நீர்தானே – 2
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே (2)
என் எல்லாமே ஐயா நீர்தானே – 2
இம்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே (2)
எந்நாளுமே ஐயா நீர்தானே-2
#7.
இறைவன் சொல்வது சமாதானமே -3
1. ஆண்டவரே உமது இரக்கத்தை
எங்களுக்குக் காட்டியருளும்
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்
ஆண்டவராகிய இறைவன் சொல்வது
என்னவென்று நான் கேட்பேன்
அவர் பேசுவதோ சமாதானமே - இறைவன்
2. ஆண்டவர்க்கு அஞ்சுவோர்க்கு
மெய்யாகவே மீட்பு அண்மையில் உள்ளது
அதனால் நம் வீட்டிலும் நாட்டிலும்
அவரது மாட்சிமை குடிகொள்ளும் - ஆண்டவராகிய...
3. இரக்கமும் சொல்லுறுதியும் ஒன்றை ஒன்று சந்திக்கும்
நீதியும் அமைதியும் ஒன்றை ஒன்று அரவணைக்கும்
ஆண்டவராகிய...
#8.
"நம்பி வந்தேன் இயேசுவே"
Lyrics: நம்பி வந்தேன் இயேசுவே என்னைக் குணப்படுத்தும் (4)
வாழ்வும் வழியும் வளமும் நலமும் நீரே என்னும் உண்மையை
எனது நலமே எண்ணி வாழ்ந்து பாவம் செய்தேன் இரங்குவீர்
உள்ளத்தாலும் உடலினாலும் உடைந்து போனேன் பாருமே
தான் வாழ பிறரைக்ககெடுத்த பாவி என்னை மன்னியும்
மனிதரிடையே உம்மைக்காணும் பார்வை எனக்குத் தாருமே
இரக்கம் காட்டி இரக்கம் அடையும் இதயம் எனக்கு அருளுமே
வாழ்வுக்கான உந்தன் வாக்கை கேட்கும் செவியைத் தாருமே
உண்மை உழைப்பில் உயர்ந்து வாழும்
உணர்வு என்னில் ஊட்டுமே
எனக்குத் தீமை செய்தபேரை மன்னித்து மறக்க உதவுமே.
#9.
"நான் பாவி இயேசுவே"
Lyrics: நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே -2
விழுந்து விட்டேன் - மனம் உடைந்துவிட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே (2).
கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே (2)
புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை காட்டும் இயேசுவே (2)
சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே (2)
நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே (2).
App Link: https://play.google.com/store/apps/details?id=com.arulvakku.lyrics.app
#10.
என் விழியே இயேசுவை நீ பாரு
என் நாவே இயேசுவை நீ பாடு - 2
2. என் சிரசே இயேசுவை நீ வணங்கு - 2
என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு - 2
3. என் கரமே இயேசுவின் மொழி எழுது - 2
என் காதே இயேசுவின் மொழி கேளு - 2
4. என் காலே இயேசுவின் வழி செல்லு - 2
என் உயிரே இயேசுவின் பதம் சேரு - 2
882. என்னுயிரே இறைவா உன் திருவடி சரணம்
உன் பதம் அமர்ந்து உன் முகம் காண
என்ன தவம் செய்தேன் நான் - 2
- உம் மொழி கேட்க
- உம் அன்பை சுவைக்க
- உம் புகழ் பாட
- உன்னுடன் பேச
- உன் அருள் பெறவே
883. கருணை இறைவா சரணம்
கடைக்கண் பாராய் சரணம் - 2
1. நட்பினை விடுத்தோம் நலந்தனை இழந்தோம் - 2
2. ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம் - 2
3. நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம் - 2
4. ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம் - 2
5. மன்னிக்க மறந்தோம் மரமென இருந்தோம் - 2
884. கருணை காட்டுமய்யா கவலை நீக்குமய்யா
1. ஆதாமின் பிழைகளைப் பொறுத்தது போல்
அன்போடு அணைத்து வளர்த்தது போல்
2. இஸ்ராயேல் செயல்களைப் பொறுத்தது போல்
இடர்களைப் போக்கிக் காத்தது போல்
3. தாவீதின் பிழைகளைப் பொறுத்தது போல்
தாழ்நிலை நீக்கி அணைத்தது போல்
4. சமாரியப் பெண்ணைப் பொறுத்தது போல்
சத்திய வழியில் அழைத்தது போல்
5. விபச்சாரப் பெண்ணைப் பொறுத்தது போல்
விடுதலை வாழ்க்கை கொடுத்தது போல்
6. சிலுவையில் கள்வனைப் பொறுத்தது போல்
சிதறிய மனிதனை இணைத்தது போல்
7. கொலை செய்த யூதரைப் பொறுத்தது போல்
குவலயம் வாழச் செய்தது போல்
885. இறைவா..... இறைவா.... இறைவா....
கருணை தெய்வமே கனிந்துருகும் இயேசுவே - 2
1. கல்லினில் ஈரம் தந்தவரே - 2 - உம் நெஞ்சினில் நேசம் நானுணர்ந்தேன்
2. தனிமையில் இனிமை நீயானாய் - 2 - உன்
உறவினில் நிறைவை நானுணர்ந்தேன்
3. உனது அன்பை நான் கண்டேன் - 2 - அதன்
இனிமையை சுவைத்து மகிழ்ந்திருந்தேன்
4. மனிதனான உனைக் கண்டேன் - 2 - என்
மானிட மாண்பின் நிலை உணர்ந்தேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக