செப்டம்பர் 23
பியத்ரெல்சினா புனித தந்தை பியோ, அருப்பணியாளர்
வருகை பல்லவி : தானியேல் (இ) 1:61, 64
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
தொடக்க மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பாடுகளில் பங்கேற்கும் பேற்றைத் தனிப்பட்ட அருளால் அருள்பணியாளரான புனித பியோவுக்கு வழங்கி அவரது பணியால் உமது இரக்கத்தின் வியத்தகு செயல்களை மீண்டும் நிகழ்த்தினீரே, அவரது பரிந்துரையால் கிறிஸ்துவின் துன்பங்களில் நாங்கள் என்றும் பங்குபெற்று உயிர்ப்பின் மாட்சிக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேருவோமாக. உம்மோடு...
காணிக்கை மன்றாட்டு
ஆண்டவரே, பீயத்ரெல்சினாவின் புனித தந்தை பியோவின் நினைவாக நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளும், இப்புனிதமான மறைநிகழ்வுகளில் பங்கேற்பதன் வழியாக , எம் ஆண்டவராகிய கிறிஸ்துவினுடைய மீட்பின் பலனைப் பெற நாங்கள் தகுதியுடையவர்களாக மாறுவோமாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகிறோம்.
நற்கருணை பல்லவி : ஏசா 61:1,2
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்; ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.
நன்றி மன்றாட்டு
ஆண்டவரே, உமது தெய்வீக இரக்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கையையும் பற்றுறு தியையும் கொண்டிருக்க வேண்டுகிறோம். புனித தந்தை பியோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விடாமுயற்சியுடன் உமக்கு சேவை செய்ய , எங்கள் ஆண்டவராகி கிறிஸ்துவின் மூலம் அனைவருக்கும் அயராத தொண்டு செய்வோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக