உயிர்ப்பு ஞாயிறு 2025

மனைவி:
என்னங்க
சொர்க்கத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து
வாழ முடியாதாமே? 

கணவன் : அதனாலதான்டி அது சொர்க்கம்.!!!
###

மனைவி:- நீங்க குடிப்பதை எப்போ நிறுத்தப்போறீங்க?

கணவன்:- நீ சீரியல் பார்ப்பதை நிறுத்தியவுடனே?

மனைவி : "சரி சரி, அளவா குடிங்க ஒடம்பகெடுத்துக்காதீங்க".
####
கணவன்:
இனிமே உன் கூட வாழ மாட்டேனு உங்க அம்மா வீட்டுக்கு போனியே இப்ப எதுக்கு திரும்ப வந்த ..?

மனைவி :
நான் இல்லாம நீ ரொம்ப நிம்மதியா இருக்க'னு எதிர் வீட்ல சொன்னாங்க அதான் திரும்ப வந்தேன்...
###
 கிணற்றுக்குள் மாட்டிக்கொண்ட திருடன் 
 விடிய விடிய காத்திருந்த நிகழ்வு
###

 மரணத்தை வென்று இயேசு உயிர்த்தார்! அல்லேலூயா!!

🌹 வெற்றுக் கல்லறை இயேசு உயிர்த்து விட்டார் என அறிவிக்கிறது. 
🌹 இயேசுவின் தலைமாட்டில் உள்ள துணியும் இயேசுவை சுற்றி அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட துணியும் அங்கே கிடைக்கிறது. இயேசுவின் உடலை மட்டும் காணோம். கல்லறைக்குள் இருந்து துணிகளும் இயேசு உயிர்த்து விட்டார் என்று உண்மையை அறிவிக்கிறது 
🌹 கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடலை காணவில்லை  என்று மகதல மரியா அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்கிறார்.
🌹 திருத்தூதர யோவான் மற்றும் பேதுரு விரைந்து வருகிறார்கள். பேதுருவை விட யோவான் வேகமாக ஓடிவருகிறார் வயதில் குறைந்தவர் என்பதனால். கல்லறைக்குள் குனிந்து பார்க்கிறார். சொன்னபடியே உண்மையாக இருக்கிறது. உண்மையை உறுதி செய்ய இரண்டு சாட்சிகள் வேண்டும். ஆகவே பேதுருவுக்காக திருத்தூதர் யோவான் கல்லறைக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். பேதுரு கல்லறையை வந்து அடைந்ததும் உறுதி உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு சொன்னபடியே அங்கு காணப்படுகிறது. 
 இறந்து மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொன்னதை நினைவு கூறுகிறார்கள். அதன்படியே கண்டார்கள் நம்பினார்கள்.
 இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் அல்லேலூயா.

🌹 இன்றைய முதல் வாசகத்தில் அப்போஸ்தலர் பணியிலே திருத்தூதர் பேதுரு உயிர்த்த  இயேசுவுக்காக சாட்சி பகர்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தார் என்றும் உயிர்த்த ஏசு தங்களோடு உண்டு குடித்தார் என்றும் உண்மையாகவே உயிரோடு இருக்கிறார் என்றும் பேதுரு சாட்சி பார்க்கிறார். அவரை நம்பி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு பாவ மன்னிப்பும் நிலை வாழ்வும் உண்டு என்று போதிக்கிறார்.

🌹 இரண்டாம் வாசகத்திலே கிறிஸ்துவோடு இறந்து உயிர்த்தெழுந்த நீங்கள் மேல் உலகில் உள்ளவற்றையே நாடுங்கள் அங்கே கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் என்று மேல் உள்ளத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளில் நமக்கு கற்பிக்கிறார்.

1. வெற்றுக் கல்லறை போல துணிகளைப் போல இயேசு உயிர்த்து விட்டார்  என்பதற்கு சாட்சியாக விளங்க வேண்டும்.

2. மகதல மரியாவை போல திருத்தூதர்கள் பேதுரு மற்ற யோவானை போல இயேசு உயிர்த்து விட்டார் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

3. அப்போஸ்தலர்கள் போல இயேசு உயிர்த்து விட்டார் என்று மற்றவர்களுக்கும் அறிவித்து சாட்சியாக வாழ வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித வெள்ளி 2025

சிலுவையின் அடியில் அன்போடு அன்னை மரியா 

இந்த தவக்காலத்தில் இயேசுவின் தாயார் சிலுவையின் அடிவாரத்தில் நிற்கும் அழகிய உருவத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், புனித வெள்ளி அன்று அவரது தாய்மை அன்பு மற்றும் அனுபவத்தைப் பற்றிய சில நுண்ணறிவுகளைப் பெறுவீர்கள். அவர் இறுதிவரை உண்மையுள்ளவராக இருந்தார். உலக மீட்புக்காக தனது சொந்த தெய்வீக மகனின் தியாக மரணத்தைப் பார்த்து, சிலுவையின் அடிவாரத்தில் இருப்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவர் இருந்திருக்க மாட்டார்.


சிலுவையைப் பார்க்க நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்துக் கண்ணோட்டங்களிலிருந்தும், இயேசுவின் சொந்தத் தாயின் கண்ணோட்டம் சிறந்தது. வீரர்கள் நம் ஆண்டவரை கேலி செய்து நின்றனர், ஒருவேளை சிலர் குழப்பமடைந்திருக்கலாம், ஒருவேளை சிலர் இயேசுவின் மீது பரிதாபப்பட்டிருக்கலாம். மறைநூல் அறிஞர்களும்  பரிசேயர்களும் அவமதிப்புடனும் சுயநீதியுடனும் பார்த்தனர், தங்கள் வெறுப்பையும் பொறாமையையும் இரட்டிப்பாக்கினர். பெரும்பாலான அப்போஸ்தலர்கள் ஓடிவிட்டனர், அவர்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார், மற்றொருவர் நம் ஆண்டவரை அறியவே இல்லை என்று மறுத்தார். ஆனால் இயேசுவின் சொந்தத் தாயார், வேறு சில புனிதப் பெண்களுடனும் அன்பான சீடரான யோவானுடனும் சேர்ந்து, இயேசுவின் இருதயத்திற்கு ஆறுதல் கூறி, அன்புடன் அங்கே நின்றார்.


சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிரப்பட்ட அன்பு மரியாளின் இதயத்தில் இரு மடங்காக இருந்தது. அவளுடைய மகன் மீதான அவளுடைய அன்பு அவர் மீதான அவளுடைய அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்தியது. அது எல்லா பயத்தையும் நீக்கியது. அது ஒருமையில் கவனம் செலுத்தியது. அது அனைத்தையும் விழுங்குவதாக இருந்தது. அவள் தன் மகன் மீதான இந்த அன்பைப் பகிர்ந்து கொண்டதால், அவள் உண்மையிலேயே அவருக்கு ஆறுதல் கூறினாள். இது சிந்திக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உண்மை. இயேசு கடவுளின் மகன் என்பதால், அந்த நேரத்தில் அவருக்குத் தனது தாயின் அன்பின் மனித ஆறுதல் தேவையில்லை. ஆனால் மனிதனாக மாறியதன் மூலம், இயேசு அவளுடைய அன்பை ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார். அந்த ஏற்றுக்கொள்ளும் செயலில், அவளுடைய மனித அன்பு அவரது மனித இதயத்தை ஆறுதல்படுத்த அனுமதித்தார். இந்த ஆறுதல் மற்றும் உறுதியான அன்பு மனித அன்பின் பரிபூரணத்தை வெளிப்படுத்தியது.

சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிரப்பட்ட அன்பின் இரண்டாவது வடிவம் இயேசு தனது தாய்க்கு அளித்த அன்பு. அதன் மையத்தில், இந்த அன்பு மீட்பின் பரிசாகும். அவளுக்கு, அவரது சிலுவையின் கிருபை அவள் கருத்தரித்த தருணம் வரை காலத்தைக் கடந்து, அவளை அசல் பாவத்திலிருந்து விடுவித்தது. சிலுவையின் மீதான இயேசுவின் அன்பு, அவளை, பின்னோக்கி, மாசற்ற கருத்தரிப்பாக மாற்றியது, மேலும் இயேசுவை அவளுடைய மகனாக மட்டுமல்ல, அவளுடைய இரட்சகராகவும் அறிய உதவியது. சிலுவையின் மீதான அந்த தருணத்தில் இயேசுவின் அன்பு, அவளுடைய மனித நிலையில் அவளைப் பராமரிப்பதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அவளைத் தனது சொந்த தாயாகப் பராமரிக்க யோவானிடம் அவர் அவளைக் கொடுத்தார், அவ்வாறு செய்வதன் மூலம், சிலுவையின் அடிவாரத்தில் நிற்கும் நம் அனைவருக்கும் அவளைக் கொடுத்தார், அவளை எங்கள் சொந்த ஆன்மீகத் தாயாகக் கருதினார்.

கடவுளின் அன்பைப் புரிந்துகொள்ள விரும்பினால், சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த மாசற்ற மற்றும் பரிபூரண அன்பைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். இன்று, குறிப்பாக, நீங்கள் அப்போஸ்தலன் யோவானுடன் நின்று தாய்க்கும் மகனுக்கும் இடையிலான இந்த பகிரப்பட்ட அன்பைப் பார்க்க அழைக்கப்படுகிறீர்கள். அவர்களுடன் நின்று இந்த புனிதமான அன்பின் பரிமாற்றத்தில் பங்கு பெற யோவான் உங்களுக்கு ஒரு அழைப்பாக இருக்கிறார்.

இந்த அன்பை நீங்கள் காணும்போது, ​​உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், அத்தகைய அன்பில் பங்கேற்க உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்களுக்குத் தேவையான தைரியத்தையும் பலத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்திய அனைவரையும் மன்னிக்கும் திறன். அனைத்து கசப்புகளிலிருந்தும் விடுதலை. அசைக்க முடியாத அர்ப்பணிப்பு. பரிபூரண பாசம். இவை மற்றும் சிலுவையில் தாய் மற்றும் மகனின் இதயங்களில் இருந்த பல குணங்கள் அனைத்தும் கடவுள் உங்களுக்கு அருள விரும்பும் குணங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு உறவிலும் அவற்றை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த அன்பின் பரிபூரணம் உங்கள் மீது வர வேண்டும் என்றும், இந்த அன்பை நீங்கள் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

இந்த புனித வெள்ளியன்று, இந்த தாய் மற்றும் இந்த மகனின் அன்பின் இந்த மிகவும் புனிதமான காட்சியைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய முயற்சி செய்யுங்கள். இந்த தாய் மற்றும் மகனின் பல நற்பண்புகளைப் பார்க்கும்போது, ​​அந்த பார்வை நீங்கள் நல்லொழுக்கத்தில் வளர வேண்டிய வழிகளை உங்களுக்கு வெளிப்படுத்தட்டும். கடவுளின் தாய் இப்போது உங்கள் தாயாக இருக்கிறார், கடவுளின் மகன் இப்போது உங்கள் இரட்சகராக இருக்கிறார். அவர்களிடம் பேசுங்கள், அவர்களிடம் கேளுங்கள், அவர்களை நேசிக்கவும், அவர்களின் இதயங்களிலிருந்து பாயும் அன்பு உங்கள் இதயங்களில் ஊடுருவ அனுமதியுங்கள், இதனால் நீங்கள் அவர்களின் அன்பைப் பெற்று மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கல்வாரி கண்ட கருணையே பாடல்

கல்வாரி கண்ட கருணையே 
 மலையின் சிகரம் இமயம் என்றால் 
 அன்பின் எல்லை கல்வாரி அன்றோ 
 அந்த அன்பில் மூழ்கினால்
 அவனியே அமைதி பூங்காவாக மாறுமன்றோ!

1. சிங்காரவனத்தில் மனிதனை வைத்தார் 
 பூங்காவனத்தில் இரத்தம் சிந்தினார் 
 கற்றூணில் கட்டி அடித்தான் மனிதன் 
 பலமிழந்து விழுந்தாலும் வாரி அணைத்தார் 
 அந்த சிலுவையை - 4

 இயேசுவே என் இனியவரே என் ஆண்டவரே 
 உன் பாடுகளே என் வாழ்வின் அடிச்சு சுவடுகளே 

2. சிதைந்த மனிதன் செம்மையுற வந்தார் 
 உடைந்த உள்ளம் உரம் பெற வாழ்ந்தார் 
 நாள்பட்ட சமுதாயம் உயர்வடைய உழைத்தார் 
 உயிரிழக்கும் வேளையிலும் மன்னிப்பருளினாய் 
 அந்த சிலுவை  - 4

4. பரமனின் பாடுகளை பற்றியே நின்று விட்டாள் 
 பாவம் விலகிடுமே உண்மை பெருகிடுமே 
 அகிலம் மகிழ்ந்திடுமே அனைத்தும் உயர்ந்திடுமே 
இயேசையா

++++       ++++     ++++      ++++








பெரிய வெள்ளி - விரிவுரை
இயேசுவின் பாடுகள்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கு, பெரிய வியாழன் பாதம் கழுவும் பணிமூலம் முன்னுரை எழுதிய இயேசு, பெரிய வெள்ளியில் விரிவுரை எழுதுகிறார்.கெதரோன் நீரோடையில் தொடங்கி கொல்கொத்தா கல்லரையில் அடங்கும் வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்விரிவுரை இரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடங்கி, வாதம் விவாதமின்றி விடியலுக்குள் புதிய பாஸ்கா பலியை பலியாக்கிவிட்டனர். "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"(யோவா18:38) " அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" (யோவா19:4) "இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,"(யோவா 19:6) " நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்".பிலாத்துவின்; சாட்சியம் இது. ஆனாலும், கைவசம் உள்ள கைவந்த கொடுஞ்செயல் அனைத்தையும் கையாண்டனர்.வன்சொல், வசை மொழி, கேலி கிண்டல்,அடித்தல் இடித்தல்,முள்முடி சாட்டை அடி.. .. கிழிந்து தொங்கும் சதைகள், இரத்தம் வடியும் உடல், கண்ணீர் சிந்தும் கண்கள், ஏங்கும் இதயம், சிலுவைச் சுமை, சிலுவை மரணம் இவை அனைத்தும் நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கான பல்வேறு விரிவுரைகள்.

மனிதனோடு என்றும் வாழ விரும்பிய இறைவன், அப்ப இரச வடிவில் தன் உடலையும் இரத்தத்தையும், பெரிய வியாழன் இராவுணவின் போது ஆன்ம உணவாக் கினார். இதே செயலின் இன்னொரு வடிவம் பெரிய வெள்ளிக்கிழமை முழுவதும் கடும் வேதனை, சோதனை, கொடுமை மத்தியில் நிகழ்ந்துள்ளது. நம் கணிப்பில் இரு நிகழ்வும் இரண்டு நாள் நிகழ்ச்சிகள். ஆனால் இரண்டும் ஒன்று. ஒரே பொழுதில் நிகழ்ந்தவை. ஆகவே ஒவ்வொரு திருப்பலியிலும் இவை இரண்டும் இணைந்தே நடைபெறுகின்றன.

நற்கருணை எனபது ஆண்டவனை மகிமைப்படுத்துவதை மட்டும் மையப்படுத்தியதல்ல.ஆண்டவன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனின் மீட்பையும் தன்னகத்தே கொண்டது. மனிதனை மீட்பதிலும் இறைவன் மாட்சியடைகிறார். ஒவ்வொரு திருப்பலியும் இவ்விரு நோக்கங்களுக்காகவும் பலியிடப்படுகிறது. கல்வாரியில்; நிகழ்ந்ததும் இதுவே. மனிதனோடு உறவு, சமாதானம் இல்லாத நற்கருணையும் , திருவிருந்தும் பொருளற்றது என்பதாலேயே, நற்கருணை விருந்தில் அமரும்முன் உறவை உருவாக்கிக்கொள்ள, 'ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக்கொள்வோம்' என்ற அழைப்பு கொடுக்கப்படுகிறது.பலியிட வரும் முன் " ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்(மத்5:23-24) இதைச் செய்வதுதான் பெரிய வெள்ளி. கல்வாரிப் பலி.

அயலானுக்காக வாழ்வதென்பது ஒரு பெரிய வெள்ளி வாழ்க்கை. அநியாயத் தீர்ப்பு - பழிச் சொல்லுக்கு குறை இருக்காது. கண்ணீர் வடிக்காத நாளும் நேரமும் சகஐம். அலட்சியமும் அவமானமும் அடுக்கி வரும். நீதி மன்றம் காவல்நிலையம் அலையும் அலைச்சல் அதிகம் இருக்கும். உடலிலும் உள்ளத்திலும் வேதனை தொடரும். உருட்டல் மிரட்டல் சந்திக்க வேண்டியதிருக்கும். மொத்தத்தில் ஒரு பெரிய வெள்ளி, நற்கருணை வாழ்வு அங்கெல்லாம் நடைபெருகிறது. இறைவன் மகிமையடைகிறார். பாஸ்கா வாழ்வை வாழ்வோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித வெள்ளி


திருஅவை
இந்தியாவில் குருக்கள் தாக்கப்பட்டதற்கு அரசின் நடவடிக்கையில்லை
அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதும், இந்த புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என உரைத்தார் அருள்பணி ஜார்ஜ்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இரு கத்தோலிக்கக் குருக்களும் சில பழங்குடிப் பெண்களும் தாக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

Gajapati மாவட்டத்தின் Juba கிராமத்தில் மார்ச் 22ஆம் தேதி ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் கீழ் வந்த காவல்துறை குழுவால் அப்பங்கு அருள்பணியாளர் ஜோஷி ஜார்ஜ், உதவி பங்கு அருள்பணியாளர் தயானந்த் நாயக் ஆகியோரும், பங்கு கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்த பழங்குடி பெண்கள் சிலரும் காரணமின்றி தாக்கப்பட்டது குறித்து புகாரளித்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினர் தலத்திருஅவை அதிகாரிகள்.

அவ்வூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமே திட்டமிட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தின் இந்துக்கள் எவரும் தாக்கப்படவில்லை எனவும் கூறினார் பங்குதள அருள்பணியாளர் ஜார்ஜ்.

அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதும், இந்த புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என உரைத்த அருள்பணியாளர், கோவிலை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றச் சென்ற இரு அருள்பணியாளர்களும் காவல்துறையால் தாக்கப்பட்டனர் எனவும் எடுத்துரைத்தார்.

2024ல் பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் மீண்டும் வந்ததிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக பல நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெரிய வியாழன் 17/04/2025

 அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" 

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" 

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" 
&&&&&&&
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? 
@########

மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?… 
####₹₹₹

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும். 
########

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. 
#######₹₹

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் 
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
##########
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் 
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
####₹₹

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை. 

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்! 
$$$₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹%%%%%


நற்கருணையால்  மட்டும் வாழ்ந்த புனிதர்கள் 

St. Catherine of Siena: 7 ஆண்டுகள்

St. Nicholas of Flüe:  20 years, 

 அருளாளர் Alexandrina Maria da Costa:  13 years of her life. 

Marthe Robin: 51 years

Brazil இறை ஊழியர் Floripes Dornellas de Jesus (Lola): 60 years on the Eucharist alone.  16 வயதில் மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி  அவருடைய உடலின் கீழ்பாகங்கள் முழுமையாக செயலிழந்து விட்டன. இந்த ஒரு நிலையில் அவருக்கு பசி இல்லை தாகம் இல்லை தூக்கம் இல்லை. 
 நற்கருணை மட்டுமே தினம் தோறும் உட்கொண்டு 60 ஆண்டுகள் வாழ்ந்தா 1999இல் மரித்தார்.

 ஆகவே இந்த புனிதர்கள் அருளாளர்கள் இறை ஊழியர்கள் நற்கருணை ஆண்டவர் மட்டுமே எனக்கு போதும் வேற எதுவும் இந்த உலகத்தில் வேண்டாம் என்று கிறிஸ்துவை முழுமையாக நம்பி நற்கருணையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அது உண்மையாயிற்று.

பெரிய வியாழன் 

யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய முதல் பஸ்காவை நினைவுகூரும் வகையில் பஸ்கா விருந்து மாலையில் கொண்டாடப்பட்டது போல,
ஆண்டவருடைய இரா உணவு / பாஸ்கா உணவு மாலையில் கொண்டாடப்படுகிறது.

ஆட்டுக்குட்டியின் இரத்தம் யூதர்களைக் காப்பாற்றியது போல, கிறிஸ்துவின் இரத்தம் உலகம் முழுவதும் மீட்பை/ இரட்சிப்பை  கொண்டுவருகிறது.

 விடுதலைப் பயணம்  புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகம், பஸ்கா விருந்து குறித்து மக்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை விவரிக்கிறது. 

கிறிஸ்து தனது சீடர்களுக்கு அப்பத்தையும்  திராட்சை ரசத்தைத்தையும் தனது சொந்த உடலாகவும் இரத்தமாகவும் கொடுத்தபோது நற்கருணை நிறுவப்பட்டது பற்றி புனித பவுலின் கடிதம் கூறுகிறது. 

மேல் அறையில் உள்ள காட்சியை நற்செய்தி நமக்குக் காட்டுகிறது, அதில் இயேசு தன்னுடன் இருந்தவர்களின் கால்களைக் கழுவுவதைக் காண்கிறோம். இந்த வழியில் அவர்கள் அனைவருக்கும் பணியாளர்களாக / தொண்டு புரிபவர்களாக/ சேவை ஆற்றுகிறதுக்காக  இருக்க வேண்டும் என்று அவர் காட்டினார். நற்செய்தி வாசிக்கப்பட்ட பிறகு, கால்களைக் கழுவுதல் இன்று கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிவுறுத்தலை நினைவூட்டுவதாக நடைபெறுகிறது. 

நற்கருணை கொண்டாட்டத்தின் முடிவில், அதி உன்னதமான நற்கருணையை பலிபீடத்திலிருந்து ஆராதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு பீடத்திற்கு எடுத்துச் சென்று தற்காலிகமாக அங்கே நிறுவப்படுகிறது. 

பலிபீட துகில்கள் அகற்றப்பட்டு சிலுவைகள் மூடப்பட்டிருக்கும். இது ஆண்டவர்  நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டார் என்பதை நமக்குக் காட்டுகிறது.

 ஆக இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 
1.  நற்கருணையை ஏற்படுத்தியதையும்
2. குருத்துவத்தை ஏற்படுத்தியும்
 நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றோம் 
3. அன்பு கட்டளை

 நற்கருணை:

யோவான் 6:55
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

யோவான் 6:56
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

"நம்பிக்கை உள்ளவருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நம்பிக்கை இல்லாதவருக்கு எந்த விளக்கமும் சாத்தியமில்லை."
 + புனித தாமஸ் அக்வினாஸ்

+ நற்கருணையை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே நமக்கு வழங்குகிறது. வழங்க முடியும்.

+ நற்கருணை கத்தோலிக்க கிறிஸ்தவனுக்கு வாழ்வின் மையமாக விளங்குகிறது.

+ நாம் நற்கருணை ஆண்டவரை தகுதியோடு உட்கொள்ள அழைக்கப்படுகிறோம். (ஒப்புரவு அருட்சாதனம் )

+"அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்". புனித பவுல்

+ நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தினம் தோறும் நற்கருணை பலியில் பங்கு கொண்டு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் ஏற்று கிறிஸ்துவாக வாழ அழைக்கப்படுகிறோம்.

2. குருத்துவம்

 நற்கருணை ஏற்படுத்திய அதே வேளையில் நம் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து குருத்துவத்தையும் ஏற்படுத்தினார். இராவணவு பந்தியில் அமர்ந்திருந்த இயேசு கிறிஸ்து எழுந்து ஒரு துண்டை  இடுப்பில் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்பவரை போல தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவி நீங்களும் இப்படி பணி செய்து வாழ வேண்டும் என்று பாடம் சொன்னார். ஆகவே இயேசு கிறிஸ்துவே அவருக்குப் பின் அவரைப் போல பணி செய்வதற்காக குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் இன்று.

 குருத்துவம் இல்லாமல் நற்கருணை இல்லை, நற்கருணை இல்லாமல் குருத்துவம் இல்லை. நற்கருணையும் குருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கொடை. 

 ஒரு குருவானவர் இயேசுவைப் போல வாழ, பணி செய்ய அழைக்கப்பட்டு இருக்கிறார்.
 கிறிஸ்தவர்களுக்காக மட்டுமல்ல இயேசுவைப் போல எல்லா மனிதர்களுக்காகவும் உருவாக உயர்த்தப்பட்டிருக்கிறார். அவர் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்.
 ஆகவே இந்த நாளில் உங்களுடைய குருவானவருக்காக ஜெபிக்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 

+ திருப்பலியின் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாதாரண அப்பத்தின் திராட்சை ரசத்தின் வழியாக மிகவும் எளிமையாக உருவானவரின் கரங்களில் தவழ்கிறார். குருத்துவத்தின் வழியாக இயேசு உண்மையாகவே செயல்படுகிறார். அவர் இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவராக இருக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கிற பழகுகிற குருவானவர் மறு கிறிஸ்துவாக இருக்கிறார்  என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?

+ கத்தோலிக்க கிறிஸ்தவனுடைய வாழ்விலே அவன் பிறப்பிலிருந்து இறப்பு  வரையிலும் குருவானவருடைய பணி முக்கியத்துவம் பெறுகிறது.

+ குருவானவர் மீது குறை கண்டுபிடிக்கிற அவரைப் பற்றி புறணி பேசுகிற மனநிலையில் தான் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் துறந்து கிறிஸ்துவுக்காகவும் உங்களுக்காகவும் அர்ப்பணிப்போடு பணி செய்கிற குருக்களை பாராட்டி இருக்கிறீர்களா? உங்களைத் தாங்குவதற்கும் உடன் இருப்பதற்கும் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தைத் துறந்து தனியாக வாழுகின்ற குருக்களை  தாங்க வேண்டியது நீங்கள் தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

+ இயேசுவின் இறையாட்சி பணியை அவருடைய அப்போஸ்தலர்கள் தொடர்ந்து ஆற்றினார்கள்.  இப்பொழுது குருக்களும் ஆயர்களும் திருத்தந்தையும் தொடர்கிறார்கள்.  இயேசுவின் பணியை தொடர்ந்து செய்ய உங்களுடைய பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என உணர்ந்திருக்கிறீர்களா? நாம் திருச்சபையை தொடர்ந்து வழிநடத்த இன்னும் அதிகமான குருட்கள் தேவை.

 3. அன்பு கட்டளை

யோவா 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அர்ப்பண வாழ்வு

Being more humane
Living a consecrated life can help people become more mature, content, and at peace with themselves and others. 

 அதிக மனிதாபிமானத்துடன் வாழும் ஒருவருடைய அர்ப்பண வாழ்வு முதிர்ச்சி அடைந்தவராகவும் நிறைவுள்ளவராகவும்  தண்ணிலே அமைதியானவராகவும் இருக்க அவருக்கு உதவி செய்யும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் 

🌹Bishop ambrose, you religious just be. Your being is more important தன் doing.
St. Francis அசிசி preaching.
Preach at all times, if necessary words.

🌹My vocation to consecrated life.

🌹 அழைத்தவர் அவர். அவருக்கு உன்னையே கொடு. அவர் உன்னை நடத்துவார்.

 நாமாக நாம் வாழவில்லை. அவர் நம்மை வாழவைக்கிறார் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயற்கை தியானம்

நம் தந்தை புனித பிரான்சிஸ் அசிசியா இயற்கையை நேசித்தார் இயற்கையோடு சேர்ந்து இறைவனை புகழ்ந்து பாடினார் இயற்கையோடு இணைந்து இறை புகழை முன்னெடுத்தார் இயற்கையோடு பேசினார் உறவாடினார் உரையாடினார் ஆகவே சகோதரர் சூரியனின் பாடலை உருவாக்கி நமக்கு கொடுத்திருக்கிறார்.


 ஆதவன் பாடலை மிக முக்கியமான ஒன்றாக பிரான்சிஸ் எஸ் எஸ் சி ஆரின் வாழ்க்கையில் பார்க்கிறோம் ஆதவன் பாடல்கள் 800  ஆண்டுகால பாடல் ஆகும்.
 இந்த ஆண்டு 2025 ஆதவன் பாடலுக்கு எட்டு நூற்றாண்டுகள் கடந்த எண்ணுராவது ஷுபிலி அண்ட் ஆகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS