எனது விசுவாச அனுபவம் - 1

என் பெயர் ரமேஷ் பெர்னாண்டோ தூத்துக்குடியில் வாழ்ந்து வருகின்றேன். திருமணமாகி மனைவி, 2 பெண்மக்கள் உள்ளனர். கடந்த முறை கண் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கண் பார்வை நரம்புகள் மிகவும் பலவீனமாக உள்ளதால் வெளியில் எங்கும் செல்லக் கூடாது, வேலைகள் எதுவும் செய்யக் கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். மிகவும் மனமுடைந்து, விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டேன். நொறுங்கிப் போனேன். என் மனைவி மறைமாவட்டத்தில் பணி செய்வதால் மற்ற வேலைகளை நான்தான் செய்ய வேண்டும். வெறும் ஜடமாக வாழ்வது வீண் என எண்ணி வேதனையில் மூழ்கிய நான் புனித தந்தை பியோவின் உதவியை வேண்டி அவர் பாதங்களில் வீழ்ந்தேன். உருக்கமாக கண்ணீரோடு மன்றாடி நவநாள் ஜெபம் சொல்லி வந்தேன். சகோதரி ராணி ஜெகதிஸ் அவர்களிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னபொழுது ஆறுதல் கூறி எனக்காக அவர்களும் மன்றாடினார்கள். என்ன ஆச்சரியம் கண்களில் இருந்த இருள் நீங்கி கண் வெளிச்சம் கிடைத்து தற்சமயம் வெளியில் அதுவும் இரவிலும் சென்று எல்லா வேலைக ளையும் செய்து வருகிறேன். என் கண்ணீரை துடைத்து என் வேண்டுதல் கேட்டு இறை இயேசுவிடம் பரிந்து பேசிய புனித தந்தை பியோவுக்கு கோடான கோடி நன்றியை அவரது மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். இறை இயேசுவுக்கும் அன்னை மரிக்கும் நன்றி. புனித தந்தை பியோ புகழ் எங்கும் பரவ எங்களால் முடிந்த மட்டும் உழைப்போம்.புனித தந்தை பியோவை‘நம்புங்கள் நல்லதே நடக்கும்’. 

–ஜெனோ ரமேஷ் குடும்பத்தினர்
தூத்துக்குடி-01


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக