1950 ஆம் ஆண்டு ஒரு ஜென்டில்மேன் இந்த நிகழ்ச்சியைச் சொன்னார்: எனது மாமியார் (மனைவியின் தாய்) அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவரது இடது மார்பகத்திலே கேன்சர். மேலும் தொடர்ந்து வலது மார்கபத்திலும் சில மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதிகமாக பரவி விட்டதால், நான்கு மாதத்திற்கு மேல் உயிர்வாழ மாட்டார்கள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மிலனில் இருக்கும்போது சிலர் தந்தை பியோ பற்றியும் அவர் நமக்குச் செய்யும் புதுமைகளைப் பற்றியும் சொன்னார்கள். உடனேயே நான் சான் ஜியோவான்னி ரொடோந்தோவிற்குச் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்ய வரிசையில் காத்திருந்தேன். நான் தந்தை பியோவிடம் என் மனைவியின் அம்மாவிற்கு உதவி செய்யவும் அவரைக் குணமாக்கவும் வேண்டினேன். தந்தை பியோ இரண்டு முறை நீண்டபெருமூச்சு விட்டு, ‘நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். எல்லாருமே இறைவேண்டல் செய்ய வேண்டும். மீண்டும் நலம் பெறுவார்’ என்று சொன்னார். அவர் சொன்னபடியே நடந்தது. அது ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடந்தது. தந்தை பியோவிற்கு நன்றி செலுத்த அவரே சான் ஜியோவான்னி ரொடேந்தோ சென்றபோது, ‘அமைதியுடன் போ என் மகளே அமைதியுடன்போ!’ என்றார். நான்கு மாதங்களுக்குப் பதிலாக என் மாமியார் பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பல வருடங்களாக தந்தை பியோவிற்கு நாங்கள் நன்றி செலுத்தி வருகிறோம்.
பரிந்துரையால் குணம் பெறுதல்:
அருட் சகோதரி தந்தை பியோவை சென்று பார்க்க செல்லும்முன் சகோதரர் ஜியான் பிராங்கோவைச் சென்று சந்தித்தார். அவர் சகோதரி தங்கியிருந்த இடத்தில் நுரையீரலில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தார். அவர் அருட்சகோதரியிடம் ‘என் நோயைப்பற்றி தன்தையிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.
அருட்சகோதரி தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார். ஜியோவான்னி ரொடோந்தோவிற்கு இன்று சில நபர்களோடு சென்று சேர்ந்தபோது யாரோ ஒருவர் துறவியர் மடத்தின் வராந்தாவிற்கு அழைத்துச் சென்றார். நான் என் நினைவுகளில் மூழ்கி இருந்தபோது தந்தை பியோ அங்கே வந்தார். என் கரத்தைப் பிடித்து குலுக்கினார். காயங்களை முத்தமிட ஆரம்பித்தார். எனக்கு பேச்சே வரவில்லை. ‘என்னிடம் சொல்ல ஏதாவது இருக்கிறதா?’ என்று தந்தை கேட்டார்அவரது கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தந்தையே ஒரு குருவானவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்ட்டிருக்கிறார். உங்களிடமிருந்து வரும் வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்’ என்று நான் சொன்னேன்.
‘அவர் இறக்க வேண்டும் என்று விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும்? என்று தந்தை பியோ சொன்னார். ‘தந்தையே அவர் குணம் பெற விரும்புகின்றார்’சிறிது நேரம் அமைதியாய் இருந்த புனிதர் பிறகு, ‘சரி, இது ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று கூறினார். நான் வீட்டுக்குத் திரும்பும்போது சகோதரர் ஜியான் பிராஸ்கோ மருத்துவமனையை விட்டுப் போய் விட்டார். நான் அவரிடம் சென்று தந்தை பியோ சொன்னதை விளக்கினேன்.
திருத்தந்தைக்கான பரிந்துரை :
1953 ஆம் ஆண்டு இறுதியிலும், 1954ஆம் ஆண்டு தொடக்க காலத்திலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மன அழுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ‘அவரால் சாப்பிட முடியவில்லை. சாப்பிட முயன்றாலும் முழுவதுமாக வாந்தி எடுத்து விடும். தலைச்சுற்று, கக்குவான் இருமல் ஆகியவற்றாலும் துன்பப்பட்டார். அரைமணி நேரம் உறங்கி ஓய்வெடுக்க முடிந்தது மட்டுமே சிறிது ஆறுதல். அவர் சாப்பிட முடியாததால் செயற்கையான முறையில் உணவு கொடுக்கப்பட்டது. திருத்தந்தை நோய்வாய் பட்டபோது தந்தை பியோ அவருக்காக இறைவேண்டல் செய்ய வாக்களித்தார். மேலும் தனது உடல் நலத்தையும் தனது வாழ்வையுமே திருத்தந்தைக்காக கடவுளிடம் கையளித்தார். சில நாட்களுக்குப் பிறகு தந்தை பியோ அதிக காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டார். இது குறித்து தந்தை கான்ஸ்டேன்டினோ கப்போ பியான்கோ(குயவாநச ஊடிளேவயவேinடி ஊயடிbயைnஉடி) இவ்வாறு சொன்னார். ‘ தந்தை பியோ கொடுத்த வாக்குறுதியையும் அதனால் நோய்வாய்ப்பட்டதும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தந்தை அகுஸ்தினோ, தந்தை பியோவின் உள்ளரங்கல்களை அறிந்தவர் என்னிடம் சொன்னார்: ‘திருத்தந்தையின் மீது கொண்ட பெரிய கவலையினால் தந்தை பியோ நோய்வாய்ப்பட்டிருக்கிறார்’.
திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் விரைவில் குணம் பெறுவதற்காக திருத்தந்தையின் மீது சுமத்தப்பட்ட பாரத்தை தனது தோள்மீது தந்தை பியோ ஏற்றுக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு சான்ஜியோவான்னி ரொடோந்தோ மடத்துறவி செய்த துணிச்சலான தியாகச் செயல் பற்றிய செய்தி திருத்தந்தையை சென்றடைந்தது. அதன் பிறகு, தந்தை பியோவின் இறைவேண்டல்களுக்காகவும் துன்பங்களுக்காகவும பிரான்சிஸ்கள் மடத்துறவியரின் அதிபருக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதத் தீர்மானித்தார்.
பரிந்துரையால் கத்தோலிக்கரான மதகுரு:
தந்தை பியோவின் புதுமையினால் குணம் பெற்றதால் தன் பாராம்பரிய ரோமானிய நம்பிக்கையை விட்டுவிட்டு கத்தோதலிக்கராக சேர்ந்தார்.
ஒரு பாரம்பரிய மதத்தைச் சேர்ந்த ஒரு குருவும் அவரது குருவினரும் பியட்ரசில்னாவைச் சேர்ந்த புனித பியோவிற்கு நன்றி செலுத்துவதற்காக கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தனர். ரோமேனியாவின் மத்திய தெற்குப் பகுதியைச் சேர்ந்த வலேயா மாவட்டத்திலுள்ள பெசன்னாவில் இந்த புதுமை நடந்தது. எழுபத்தி ஒரு வயது நிரம்பிய அந்த பங்கின் பங்குகுருவின் தாய்க்கு நுரையீரலில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோயினால் நீண்ட காலமாக அவர் பெரிதும் துன்பப்பட்டார். மருத்து சோதனைக்குப் பிறகு இன்னும் சில மாதங்களே அவரால் வாழ முடியும் என்று மருத்துவர் சொல்லி விட்டனர். அறுவைச் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கடந்து சென்றுவிட்டது.
இத்தாலியில் உள்ள ரோமை நகரத்திற்குத் தன் தாயைக் கொண்டு சென்று அங்குள்ள சிறந்த மருத்துவம் செய்ய தன் சகோதரனிடம் கேட்டுக் கொண்டார். அந்த ஆர்தோடாக்ஸ குருவின் சகோதரர் சிறந்த மருத்துவக் குழுவினரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். ஒருநாள் பரிசோதனைக்காக சென்றபோது அருகில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்கு அவரது தாயார் சென்றார். அந்த ஆலயத்தின் மூலையில் தந்தை பியோவின் சுரூபம் அவரை கவர்ந்திழுத்தது. அவர் தனது மகனிடம் அந்த சுரூபத்தைப் பற்றிக் கேட்டபோது தந்தை பியோவின் வர லாறு பற்றி விவராமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆலயத்திற்கு திரும்பச் சென்று வெகுநேரம் பியட்ரகல்சினாவின் புனித தந்தை பியோவின் சுரூபத்தின் முன் நீண்டநேரம் இறைவேண்டல் செய்தார். இரண்டு வாரத்திற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது எந்தவித கேன்சருக்காக அறிகுறியோ அடையாளமோ கூட சிறிதும் காணப்படவில்லை.ரோமானியாவிற்குத் திரும்பிச் சென்ற பிறகு பாரம்பரிய குருவாக இருந்த தனது மகனிடம் தனக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தாள். அவள் பாரம்பரிய திருச்சபையின் உறுப்பினராக இருந்தாலும் அவள் தந்தை பியோவிடம் வேண்டிக் கொண்ட படியினால் அவள் விண்ணப்பத்திற்கு பதில் தந்துள்ளார். உரோமேனிய நகர் முழுவதும் செய்தி பரவியது. இந்த காயம் கொண்ட துறவியை அறியத் தொடங்கினார். ஏற்கனவே அவரது பரிந்துரையால் நலம் பெற்றவர்களும் இருந்தனர். அவர் எல்லாருமே கத்தோலிக்க விசுவாசத்திற்குக் கடந்து வர விரும்பினர்.சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது விருப்பம் நிறைவேறியது. அவர்கள் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தனர்.
தந்தை பியோவின் அரவணைப்பால் வந்த குணம்:
ஒரு பெண் இவ்வாறு குறிப்பிடுகிறார்.’ எனது மகள் தெருவில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு இரும்புகதவு கழன்று மகன் மீது திடிரென்று விழுந்து விட்டது. தலையில் அடிபட்டதால் மூக்கிலிருந்தும் காதிலிருந்தும் ஏராளமாக இரத்தம் சிந்திவிட்டது. உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் நிலவரம் மோசமாக இருந்தது. மகனுக்கு நினைவு போய் விட்டது. மருத்துவர்களிடையே பதட்டம் காணப்பட்டது.
நான் அழுது துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது என் பார்வை சுவரில் இருந்த தந்தை பியோவின் படத்தின்மீது விழுந்தது. அதிக நம்பிக்கோயோடு என்மகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன். உடல்நலம் மோசமாகிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்டான். ஆச்சரியமான விதத்தில் மறுநாளே நலம் பெற ஆரம்பித்தான். மூன்றே நாட்களுக்குள் குணமாகி வீடு திரும்பினோம். வீட்டிற்குப் போகும்முன் ஏழு ஆலயத்தினுள் சென்றோம். அங்கே பியட்ரசில்வின் புனித பியோவின் உருவப்படம் இருந்தது. அந்த மகன் படத்தைப் பார்த்து விட்டு, ‘அம்மா, அவர் என்னோடு ஆஸ்பத்ரியில் இருந்தார், அவர் என்னை அணைத்துக் கொண்டார்’ என்று சொன்னான்.
நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தி அழுதேன் தந்தை பியோவிற்கு நான் மனமகிழ்ச்சியாக நன்றி செலுத்தினேன். தொடரும். . .
பேரா. இமாகுலேட் பிலிப்,
நாகர்கோவில்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக