எனது அருமையானவர்களே!

வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். (உரோ. 12 : 13)

நம் மீட்பர் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயார் செய்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்‘  ஐரோப்பாவில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சன் ஜிவான்ஜி ரொத்தொந்தோ புனித தந்தை பியோவின் தலைமையில் (1940-1956) உருவான இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து மட்டுமல்ல.   அன்பும் கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தந்தை பியோவின் இதயத்திலிருந்து ஊற்றெடுத்தத் திட்டம். இது பல நாடுகளோடு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது. 1200 படுக்கை வசதிகளும் 3000 ஊழியர்களையும் கொண்ட இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெற செய்தவர்கள் அகிலமெங்கும் உள்ள புனித தந்தை பியோவின் ஜெபக்குழுக்கள்.

இந்த இல்லம் துன்புறும் சகோதர சகோதரிகளுக்கு அன்பின் பராமரிப்பை வழங்குகிறது. அவரே தன் வாழ்நாளில் அந்த இல்லத்தில் துன்புறும் நோயாளிகளை சந்தித்து அன்பின் பணி செய்தார். அன்பின் தூதராக வாழ்ந்தார். அன்பு பணியை அவர் தனது தலையாய பணியாக கொண்டிருந்தார்.

இந்த அன்பு பணியை பராமரிப்பின் மகள் என்று அழைக்கிறார். அவர் தனது வாழ்வில் ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு எப்படியாவது உதவும் உள்ளம் கொண்டவராக இருந்தார். ‘‘கூhந அசையஉடந அயn, யீயனசந யீiடி’’ என்ற திரைப்படத்தில் யாருக்கும் தெரியாமல் கோவில் உண்டியலை திறந்து யாரும் அறியாதபடி இரண்டு பிள்ளைகளை உடைய ஒரு ஏழைத்தாய்க்கு கொடுப்பது, அவர் எப்படி தர்மம் செய்ய விழைகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. அன்பு பணியை எப்படியும் செய்தாக வேண்டும் என்பது தந்தை பியோவின் தாகம். இதோ அன்பு செயல் பற்றி அவரின் சிந்தனைகள்.  ‘

‘நூலிலே முத்துக்கள் கோற்கப்பட்டுள்ளது போல அன்பு செயல்களிலே புன்னியங்கள் கோற்கப்பட்டுள்ளன’’  ‘‘நூல் அறுந்து போகும் பொழுது முத்துக்கள் சிதறிப்போகும். அதுபோல் அன்பு செயல்கள் குறைகின்ற பொழுது புண்ணியங்கள் மறைந்து விடுகின்றன.’’

‘‘முழுமையின் மையம் அன்பு செயல். அன்பு செய்து வாழ்கிறவர் கடவுளில் வாழ்கிறார். ஏனென்றால் திருத்தூதர் யோவான் கூற்றுபடி ‘‘அன்பே கடவுள்’’.
‘‘கிறிஸ்துவ அன்புடன் மற்றவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.’’  ‘‘தனிமையை நாடுங்கள், ஆனால் அயலாருக்கு அன்பை மறுக்காதீர்கள்.’’ ‘‘அன்பு செயல்கள்தான் கடவுள் நம்மை தீர்ப்பிடும் உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். (உரோ 12 : 10)
அளவுகோலாக உள்ளது.’’  ‘‘அன்பு செயல் புரிய வாய்ப்பு கிடைக்கும்பொழுது நடைமுறைகளையும் கடந்து செய்து விடு.’’  ‘‘அன்பு குறைவு இயற்கைக்கு எதிரான பாவம்’’ ‘‘அன்பு குறைவு மக்களுடைய கடவுளின் கண்களை காயப்படுத்துவது ஆகும்.’’ ‘‘அன்பு செயல்தான் பராமரிப்பின் மகள்’’  அன்பு செயலும் ஜெபவாழ்வும்தான் தந்தை பியோவின் வாழ்வும் கற்பித்தலுமாக இருந்தது. இப்படி தன் வாழ்வில் உறுதியாகவும் இருந்தார் என்பது தெளிவு. காரணம் நம் ஆண்டவரின் கட்டளை மிகவும் தெளிவாக இருக்கிறது. ‘‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்  புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல் நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’’ (யோவா 13 : 34). கட்டளையை கருத்தாய்க் கடைப்பிடித்த தந்தை, இயேசுவின் உண்மை சீடராய் திகழ்ந்தார். காரணம் அவர் அன்பு செயல்களில் நிலைத்திருந்தார். ‘‘நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’’ (யோவா 13 : 35) இயேசுவின் சீடராக அவர் மட்டுமல்ல அவரது ஜெபக் குழுவினரும் சீடராக வாழ வழிகாட்டினார். ஆண்டவரே நம்மை அன்பு செய்தார் ( 1 யோவா 4 : 19). மனிதனாக மாட்டுக்குடிலில் பிறந்து கல்வாரியில் நமக்கு மீட்பை வழங்கினார். அவரது அன்புக்கு இணையாக நம்மால் முழுமையான அன்பு காட்ட முடியுமா? ‘‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’’(1 யோவா 4 : 20) என்கிறார் யோவான் திருத்தூதர். யார் என் சகோதர சகோதரிகள்? ‘‘ஒவ்வொரு மனிதரும் என் சகோதரன்’’ என்கிறார் திருத்தந்தை 6ஆம் பவுல். புனித தந்தை பியோ தன் சகோதர சகோதரிகளை அதுவும் துன்புறுவோரின் தேவைகளை சந்தித்து ஆறுதலாக இருந்தார். இதன் அடையாளமாகத்தான் ‘‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்’’ திகழ்கிறது. இது ஒரு மருத்துவமனை அல்லது சுகாதார மையம் என்று அழைக்க விரும்பவில்லை. மாறாக இல்லம் அல்லது வீடு என்று அழைத்தார். காரணம் இல்லம் தான் அன்பை அனுபவிக்கும் இடம். அன்பு பரிமாறப்படும் இடம். ‘‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்’’ அவ்வளவு முக்கியம் என்று தந்தையவர்கள் கருதியிருந்தார். அந்த இல்லம் ஏன் இவ்வளவு சொகுசு நிறைந்ததாக கட்டப்பட வேண்டும்? இது ஊதாரித்தனமான செலவு என்று குறைகூறப்பட்டபோது, அவர் துன்புறுவோரில் கிறிஸ்து இருக்கிறார். அந்த கிறிஸ்துவே துன்புறுகிறார். அவருக்காக இதை தங்கத்தால் செய்தாலும் அது தகும் என்றார். 

புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது... ‘‘நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க’’, ‘‘எதுக்குடா செல்லம்?’’ நான் சேஃப்டியாக லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டுகால் கொடுக்கனும்!’’ ஆம் இதுதான் இன்றைய மனித சமுதாய சூழ்நிலை. பிறக்கும் குழந்தையே பயத்தோடும் பாதுகாப்பின்றியும் பிறக்கிறது. ஆகவே இன்றைய உலகில் அன்பு செய்யும் மனிதர்கள் அதிகம் தேவை, ஆயுதம் மனிதர்கள் அல்ல. இருப்பது பகிறா குறையே, பற்றாக்குறை அல்ல. அன்பு பணி செய்து கிறிஸ்துவின் சீடர்களாய் இருப்போம். இனிதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் எந்நாளுமே’’.

டிசம்பர் 8 நம் அன்னை மரியாவின் அமல உற்பவ திருநாள். நினைவு கூர்ந்து கொண்டாடுங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான அன்புநிறை கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும் ஆசீரும்.
-ஆன்மிக வழிகாட்டி அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித பியோ நவநாள் ஜெபம்

அர்ப்பண ஜெபம்
இந்த புதிய நாளுக்காக நன்றி ஆண்டவரே. ஏன்னை அன்பு செய்து ஆதரிப்பவர்களுக்காக உமக்கு நன்றி.
இந்த நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்த எனக்கு உதவியளும்.
பயம், சுயநலம் மற்றும் பேராசையிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
இன்று என்னால் யாரும் துன்புறாமல் இருப்பார்களாக.
எனது பேராசையால் யாரும் பசியால் வாடாதிருப்பார்களாக.
எனது ஆதரவு இல்லாததால் யாரும் தனிமையில் வாடாதிருப்பார்களாக.
நான் தேவைப்படுகறவர்களுக்கு எனது இதயம் திறந்திருப்பதாக.
என்னை கண்ணின் மணி போல் காப்பதற்காக நன்றி ஆண்டவரே. ஆமென்.

இயக்க ஜெபம்
இறையருளால் முழுமையாக நிரப்பப்பெற்ற முழுமையின் தாயே, எம் அன்னை மரியே, நீர் வாழ்க. பூவுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே, உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீக பிள்ளைகளாகிய நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட, ஆற்றல் தாரும் அம்மா. மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக பொழிந்தருளும் தாயே, இம்மண்ணில் நிறை அமைதியும், இறைபிரசன்னமும் நிலைக்கட்டும். பாவிகளாகிய எங்களுக்காக, உம் மகன் இயேசுவிடம் மன்றாடும் அம்மா, ஆமென்.

புனித பியோ நவநாள் ஜெபம்
ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, ஜெபமாலை பக்தியை சாத்தானை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்ச,p பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே, இதோ வேதனைகளோடும் வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடித் தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப்பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும்) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்;

அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும் உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். 1பர, 1 அரு, 1திரி

இயேசுவின் திரு இருதயத்திடம் புனித பியோ ஜெபித்த சக்தி வாய்ந்த நவநாள் ஜெபம்
1. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள் தரப்படும் தேடுங்கள் அகப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்என மொழிந்த என் இயேசுவே இதோ நான் தட்டுகிறேன். தேடுகிறேன். நான் கேட்கிறேன். என் மன்றாட்டுக்களை கேட்டருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி

இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

2. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். என் பெயரால் தந்தையிடம் நீங்கள் எதைக்கேட்டாலும் அதை உங்களுக்கு அவர் அருள்வார்என்று கூறிய என் இயேசுவே இதோ உமது தந்தையிடம் உமது திருப்பெயரால் பணிவோடும் அவசரமாகவும் நான் எழுப்பும் மன்றாட்டுக்களை கேட்டு அருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

3. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். விண்ணும் மண்ணும் அழிந்து போகும் ஆனால் என் வார்த்தையோ அழியாதுஎன்று உரைத்த என் இயேசுவே இதோ என் மன்றாட்டுகளை கேட்டு அருள்வீர் என்று உண்மையாகவே நம்புகிறேன். (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

ஆதறவற்றோர் மீதும் துன்புறுவோர் மீதும் இரக்கப்படாமல் இருக்க இயலாத இயேசுவின் திரு இருதயமே, மிகப்பெரும் பாவிகளாகிய எங்கள் மேல் இரக்கமாயிருக்க, உமது அன்புத்தாயும் எங்கள் அன்னையுமான தூய மரியாயின் மாசற்ற இதயத்தின் பரிந்துரை வழியாக, நாங்கள் பணிவுடன் கேட்கும் அருளை எங்களுக்கு வழங்குவீராக. ஆமென்


திரு இருதயத்தின் வளர்ப்புத் தந்தையான, தூய யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரியன்னையின் தூய செபமாலை

துவக்கம் : நமது மீட்பருடைய 5 புனித காயங்களையும் மகிமைப்படுத்தி, 5 முறை சிலுவை வரையவும்.

பெரிய மணியில்: வியாகுலம் நிறைந்த மரியன்னையின் தூய இதயமே, உமது அடைக்கலத்தைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிறிய மணியில்: பரிசுத்த மாதாவே அன்பினால் பற்றி எரியும் உமது தூய இதயத்தின் வழியாய் எங்களைக் காப்பாற்றும்.

முடிவில் பிதாவுக்கும். . . . . . (3 முறை)

தேவனின் தாயே, உமது அருள் வல்லமை நிறைந்த சிநேக அக்கினியை அகில உலக மனுக்குலத்தின் மீது இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் பொழிந்தருளும். ஆமென்.

மரியாயின் மாசற்ற இதயம் எங்கும், எப்போதும், மாட்சியும், மகிமையும், புகழும், வெற்றியும் பெறுவதாக !

சகோ. சிறியபுஷ்பம்
தூய இதய ஆசிரியப் பயிற்சி நிறுவனம்,கடலூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pio Kural September-Octorber

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பியோ குரல் சூலை - ஆகஸ்ட் இதழ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசுவின் ஐந்து காயம் பெற்ற நறுமணத்தவர் தந்தை பியோ குணமளித்தல்: 11


1950 ஆம் ஆண்டு ஒரு ஜென்டில்மேன் இந்த நிகழ்ச்சியைச் சொன்னார்: எனது மாமியார் (மனைவியின் தாய்) அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவரது இடது மார்பகத்திலே கேன்சர். மேலும் தொடர்ந்து வலது மார்கபத்திலும் சில மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதிகமாக பரவி விட்டதால், நான்கு மாதத்திற்கு மேல் உயிர்வாழ மாட்டார்கள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மிலனில் இருக்கும்போது சிலர் தந்தை பியோ பற்றியும் அவர் நமக்குச் செய்யும் புதுமைகளைப் பற்றியும் சொன்னார்கள். உடனேயே நான் சான் ஜியோவான்னி ரொடோந்தோவிற்குச் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்ய வரிசையில் காத்திருந்தேன். நான் தந்தை பியோவிடம் என் மனைவியின் அம்மாவிற்கு உதவி செய்யவும் அவரைக் குணமாக்கவும் வேண்டினேன். தந்தை பியோ இரண்டு முறை நீண்டபெருமூச்சு விட்டு, ‘நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். எல்லாருமே இறைவேண்டல் செய்ய வேண்டும். மீண்டும் நலம் பெறுவார்’ என்று சொன்னார். அவர் சொன்னபடியே நடந்தது. அது ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடந்தது. தந்தை பியோவிற்கு நன்றி செலுத்த அவரே சான் ஜியோவான்னி ரொடேந்தோ சென்றபோது, ‘அமைதியுடன் போ என் மகளே அமைதியுடன்போ!’ என்றார். நான்கு மாதங்களுக்குப் பதிலாக என் மாமியார் பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பல வருடங்களாக தந்தை பியோவிற்கு நாங்கள் நன்றி செலுத்தி வருகிறோம்.

பரிந்துரையால் குணம் பெறுதல்:

அருட் சகோதரி தந்தை பியோவை சென்று பார்க்க செல்லும்முன் சகோதரர் ஜியான் பிராங்கோவைச் சென்று சந்தித்தார். அவர் சகோதரி தங்கியிருந்த இடத்தில் நுரையீரலில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தார். அவர் அருட்சகோதரியிடம் ‘என் நோயைப்பற்றி தன்தையிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

அருட்சகோதரி தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார். ஜியோவான்னி ரொடோந்தோவிற்கு இன்று சில நபர்களோடு சென்று சேர்ந்தபோது யாரோ ஒருவர் துறவியர் மடத்தின் வராந்தாவிற்கு அழைத்துச் சென்றார். நான் என் நினைவுகளில் மூழ்கி இருந்தபோது தந்தை பியோ அங்கே வந்தார். என் கரத்தைப் பிடித்து குலுக்கினார். காயங்களை முத்தமிட ஆரம்பித்தார். எனக்கு பேச்சே வரவில்லை. ‘என்னிடம் சொல்ல ஏதாவது இருக்கிறதா?’ என்று தந்தை கேட்டார்அவரது கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தந்தையே ஒரு குருவானவர் கேன்சர் நோயினால் பாதிக்கப்ட்டிருக்கிறார். உங்களிடமிருந்து வரும் வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்’ என்று நான் சொன்னேன்.

‘அவர் இறக்க வேண்டும் என்று விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும்? என்று தந்தை பியோ சொன்னார். ‘தந்தையே அவர் குணம் பெற விரும்புகின்றார்’சிறிது நேரம் அமைதியாய் இருந்த புனிதர் பிறகு, ‘சரி, இது ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று கூறினார். நான் வீட்டுக்குத் திரும்பும்போது சகோதரர் ஜியான் பிராஸ்கோ மருத்துவமனையை விட்டுப் போய் விட்டார். நான் அவரிடம் சென்று தந்தை பியோ சொன்னதை விளக்கினேன்.

திருத்தந்தைக்கான பரிந்துரை :

1953 ஆம் ஆண்டு இறுதியிலும், 1954ஆம் ஆண்டு தொடக்க காலத்திலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மன அழுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ‘அவரால் சாப்பிட முடியவில்லை. சாப்பிட முயன்றாலும் முழுவதுமாக வாந்தி எடுத்து விடும். தலைச்சுற்று, கக்குவான் இருமல் ஆகியவற்றாலும் துன்பப்பட்டார். அரைமணி நேரம் உறங்கி ஓய்வெடுக்க முடிந்தது மட்டுமே சிறிது ஆறுதல். அவர் சாப்பிட முடியாததால் செயற்கையான முறையில் உணவு கொடுக்கப்பட்டது. திருத்தந்தை நோய்வாய் பட்டபோது தந்தை பியோ அவருக்காக இறைவேண்டல் செய்ய வாக்களித்தார். மேலும் தனது உடல் நலத்தையும் தனது வாழ்வையுமே திருத்தந்தைக்காக கடவுளிடம் கையளித்தார். சில நாட்களுக்குப் பிறகு தந்தை பியோ அதிக காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டார். இது குறித்து தந்தை கான்ஸ்டேன்டினோ கப்போ பியான்கோ(குயவாநச ஊடிளேவயவேinடி ஊயடிbயைnஉடி) இவ்வாறு சொன்னார். ‘ தந்தை பியோ கொடுத்த வாக்குறுதியையும் அதனால் நோய்வாய்ப்பட்டதும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தந்தை அகுஸ்தினோ, தந்தை பியோவின் உள்ளரங்கல்களை அறிந்தவர் என்னிடம் சொன்னார்: ‘திருத்தந்தையின் மீது கொண்ட பெரிய கவலையினால் தந்தை பியோ நோய்வாய்ப்பட்டிருக்கிறார்’.

திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் விரைவில் குணம் பெறுவதற்காக திருத்தந்தையின் மீது சுமத்தப்பட்ட பாரத்தை தனது தோள்மீது தந்தை பியோ ஏற்றுக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு சான்ஜியோவான்னி ரொடோந்தோ மடத்துறவி செய்த துணிச்சலான தியாகச் செயல் பற்றிய செய்தி திருத்தந்தையை சென்றடைந்தது. அதன் பிறகு, தந்தை பியோவின் இறைவேண்டல்களுக்காகவும் துன்பங்களுக்காகவும பிரான்சிஸ்கள் மடத்துறவியரின் அதிபருக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதத் தீர்மானித்தார்.
பரிந்துரையால் கத்தோலிக்கரான மதகுரு:

தந்தை பியோவின் புதுமையினால் குணம் பெற்றதால் தன் பாராம்பரிய ரோமானிய நம்பிக்கையை விட்டுவிட்டு கத்தோதலிக்கராக சேர்ந்தார்.

ஒரு பாரம்பரிய மதத்தைச் சேர்ந்த ஒரு குருவும் அவரது குருவினரும் பியட்ரசில்னாவைச் சேர்ந்த புனித பியோவிற்கு நன்றி செலுத்துவதற்காக கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தனர். ரோமேனியாவின் மத்திய தெற்குப் பகுதியைச் சேர்ந்த வலேயா மாவட்டத்திலுள்ள பெசன்னாவில் இந்த புதுமை நடந்தது. எழுபத்தி ஒரு வயது நிரம்பிய அந்த பங்கின் பங்குகுருவின் தாய்க்கு நுரையீரலில் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோயினால் நீண்ட காலமாக அவர் பெரிதும் துன்பப்பட்டார். மருத்து சோதனைக்குப் பிறகு இன்னும் சில மாதங்களே அவரால் வாழ முடியும் என்று மருத்துவர் சொல்லி விட்டனர். அறுவைச் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கடந்து சென்றுவிட்டது.

இத்தாலியில் உள்ள ரோமை நகரத்திற்குத் தன் தாயைக் கொண்டு சென்று அங்குள்ள சிறந்த மருத்துவம் செய்ய தன் சகோதரனிடம் கேட்டுக் கொண்டார். அந்த ஆர்தோடாக்ஸ குருவின் சகோதரர் சிறந்த மருத்துவக் குழுவினரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். ஒருநாள் பரிசோதனைக்காக சென்றபோது அருகில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்கு அவரது தாயார் சென்றார். அந்த ஆலயத்தின் மூலையில் தந்தை பியோவின் சுரூபம் அவரை கவர்ந்திழுத்தது. அவர் தனது மகனிடம் அந்த சுரூபத்தைப் பற்றிக் கேட்டபோது தந்தை பியோவின் வர லாறு பற்றி விவராமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆலயத்திற்கு திரும்பச் சென்று வெகுநேரம் பியட்ரகல்சினாவின் புனித தந்தை பியோவின் சுரூபத்தின் முன் நீண்டநேரம் இறைவேண்டல் செய்தார். இரண்டு வாரத்திற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது எந்தவித கேன்சருக்காக அறிகுறியோ அடையாளமோ கூட சிறிதும் காணப்படவில்லை.ரோமானியாவிற்குத் திரும்பிச் சென்ற பிறகு பாரம்பரிய குருவாக இருந்த தனது மகனிடம் தனக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தாள். அவள் பாரம்பரிய திருச்சபையின் உறுப்பினராக இருந்தாலும் அவள் தந்தை பியோவிடம் வேண்டிக் கொண்ட படியினால் அவள் விண்ணப்பத்திற்கு பதில் தந்துள்ளார். உரோமேனிய நகர் முழுவதும் செய்தி பரவியது. இந்த காயம் கொண்ட துறவியை அறியத் தொடங்கினார். ஏற்கனவே அவரது பரிந்துரையால் நலம் பெற்றவர்களும் இருந்தனர். அவர் எல்லாருமே கத்தோலிக்க விசுவாசத்திற்குக் கடந்து வர விரும்பினர்.சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது விருப்பம் நிறைவேறியது. அவர்கள் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தனர்.

தந்தை பியோவின் அரவணைப்பால் வந்த குணம்:

ஒரு பெண் இவ்வாறு குறிப்பிடுகிறார்.’ எனது மகள் தெருவில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு இரும்புகதவு கழன்று மகன் மீது திடிரென்று விழுந்து விட்டது. தலையில் அடிபட்டதால் மூக்கிலிருந்தும் காதிலிருந்தும் ஏராளமாக இரத்தம் சிந்திவிட்டது. உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் நிலவரம் மோசமாக இருந்தது. மகனுக்கு நினைவு போய் விட்டது. மருத்துவர்களிடையே பதட்டம் காணப்பட்டது.

நான் அழுது துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது என் பார்வை சுவரில் இருந்த தந்தை பியோவின் படத்தின்மீது விழுந்தது. அதிக நம்பிக்கோயோடு என்மகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன். உடல்நலம் மோசமாகிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்டான். ஆச்சரியமான விதத்தில் மறுநாளே நலம் பெற ஆரம்பித்தான். மூன்றே நாட்களுக்குள் குணமாகி வீடு திரும்பினோம். வீட்டிற்குப் போகும்முன் ஏழு ஆலயத்தினுள் சென்றோம். அங்கே பியட்ரசில்வின் புனித பியோவின் உருவப்படம் இருந்தது. அந்த மகன் படத்தைப் பார்த்து விட்டு, ‘அம்மா, அவர் என்னோடு ஆஸ்பத்ரியில் இருந்தார், அவர் என்னை அணைத்துக் கொண்டார்’ என்று சொன்னான்.

நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தி அழுதேன் தந்தை பியோவிற்கு நான் மனமகிழ்ச்சியாக நன்றி செலுத்தினேன். தொடரும். . .

பேரா. இமாகுலேட் பிலிப், 
நாகர்கோவில்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரியன்னையின் தூய செபமாலை


துவக்கம் : நமது மீட்பருடைய 5 புனித காயங்களையும் மகிமைப்படுத்தி, 5 முறை சிலுவை வரையவும்.

பெரிய மணியில்: வியாகுலம் நிறைந்த மரியன்னையின் தூய இதயமே, உமது அடைக்கலத்தைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சிறிய மணியில்: பரிசுத்த மாதாவே அன்பினால் பற்றி எரியும் உமது தூய இதயத்தின் வழியாய் எங்களைக் காப்பாற்றும்.

முடிவில் பிதாவுக்கும். . . . . . (3 முறை)

தேவனின் தாயே, உமது அருள் வல்லமை நிறைந்த சிநேக அக்கினியை அகில உலக மனுக்குலத்தின் மீது இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் பொழிந்தருளும். ஆமென்.

மரியாயின் மாசற்ற இதயம் எங்கும், எப்போதும், மாட்சியும், மகிமையும், புகழும், வெற்றியும் பெறுவதாக !

சகோ. சிறியபுஷ்பம்
தூய இதய ஆசிரியப் பயிற்சி நிறுவனம்,
கடலூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருஅவையின் 266வது திருத்தந்தை பிரான்சிஸ்


1936 ம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி Argentina நாட்டின் Jorge Mario Bergoglio ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர் Jorge வேதியில் துறையில் பட்டம் பெற்றபின், 1958 ஆண்டு தனது 22 வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.

தத்துவ இயலிலும், மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், Buenoo aires ல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Jorge, 1973 ஆண்டு முதல் 1979 ம் ஆண்டு முடிய Argentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

1969ம் ஆண்டு குருவாகத் திருநிரைப்படுத்தப்பட்ட , 1973 ஆம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு முடிய இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1992ம் ஆண்டு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998 ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001 ம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார். முதல்முறையாக,தென்அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருதந்தை பிரான்சிஸ் பிறரைத் தீர்ப்பிவோ, புறங்கூறவோ கூடாது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருத்தந்தை பிரான்சிஸ்-கண்ணீரின் வழியாகக் கடவுளைத் தெளிவாகக் காணமுடியும்?


நமது கண்ணீர் எந்த கண்ணாடியின் வழியாக இயேசுவை நாம் தெளிவாகக் காணமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.‘நான் ஆண்டவரைக் கண்டேன்’ என்று மகதலா மரியா சொன்ன வார்த்தைகளை மையப்படுத்தி (ஏப் 03, 2013) செவ்வாய் காலைத் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.சமுதாயத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பெண்ணாக, பாவத்தில் வாழ்ந்த மகதலா மரியா, இயேசுவைக் கல்லறையில் காணாததால் வடித்தத் துயரக் கண்ணீர், இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் ஆனந்த கண்ணீராக மாறியது என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, கண்ணீருக்கு உள்ள வலிமையை எடுத்துரைத்தார். நாம் ஒவ்வொருவரும் துயரிலும், மகிழ்விலும் வடிக்கும் கண்ணீருக்கு மதிப்பு உள்ளது என்றும் பல நேரங்களில் கண்ணீரின் வழியாகக் கடவுளைத் நாம் தெளிவாக காண முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுறையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கிய மறையுறையும் சிறப்பி ஆசீரும்.


அன்பு சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள். கிறிஸ்து உயிர்த்து விட்டார். இச்செய்தியை அறிவிப்பதில் எத்தனை மகிழ்ச்சி எனக்கு. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறிப்பாக அதிக துன்பங்கள் காணப்படுமிடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, சிறைச்சாலைகளுக்கு இச்செய்தியுடன் நேரடியாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் நுழைய ஆசைப்படுகிறேன்.ஏனெனில் அங்குதான் இறைவன், ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ என்ற செய்தியை விதைக்க ஆசைப்படுகிறார். உங்களுக்கு நம்பிக்கைக் காத்திருக்கிறது. நீங்கள் பாவத்தின், தீமையில் பிடியிலில்லை, அன்பு வெற்றிவாகை சூடியுள்ளது. கருணை வெற்றியடைந்துள்ளது.

கல்லறை காலியாக இருப்பதைக் கண்ட இயேசுவின் பெண் சீடர்களைப்போல் நாமும் இந்நிகழ்வு தரும் பொருள் குறித்து திகைக்கலாம். இயேசு உயிர்த்துவிட்டார் என்பதன் அர்த்தம் என்ன? கடவுளின் அன்பு தீமையை விடவும் மனத்தைவிடவும் வலிமை கொண்டது... மற்றும், கடவுளின் அன்பு நம் வாழ்வை மாற்றவல்லது என்பதே இதன் பொருள்.

இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதி எல்லை வரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, அதே அன்பிற்காக தன்மையே முற்றிலுமாகக் கையளித்தார். அதனை உருமாற்றி, முடிவற்ற வாழ்வுக்கு கடந்துசெல்லச் செய்தது. இயேசு தன் பழைய வாழ்வுக்கு, அதாவது இவ்வுலக வாழ்வுக்குத் திரும்பவில்லை, மாறாக நம் மனிதத் தன்மையோடு இறைவனின் மகிமை நிறை வாழ்வுக்குள் நுழைந்ததன் மூலம் நமக்கு நம்பிக்கையின் வருங்காத்தைத் திறந்துள்ளார். இதுதான் உயிர்ப்பு விழா. ஆம். இதுவே விடுதலைப்பயணம். பாவத்திற்கும் தீமைகளுக்கும் அடிமையாக இருந்த மனித குலத்தை அன்பு மற்றும் நன்மைத்தனம் நோக்கிய சுதந்திரத்துக்கு அழைத்துச் செல்வது. கடவுளே வாழ்வு, வாழ்வு மட்டுமே என்பதால் கடவுளின் மகிமை என்பது மனிதனே.

அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்து உறுதியாக, ஒவ்வொருவருக்காக இறந்து உயிர்த்து விட்டார். ஆனால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நன்மைத்தனத்தின் விடுதலை நோக்கிய பயணம், அதாவது உயிர்ப்பு, ஒவ்வொரு காலத்திலும், நம்முடைய தினசரி வாழ்விலும் நிகழ வேண்டும். இக்காலத்திலும் எத்தனை பாலைவனங்களை மனிதர்கள் கடந்துச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக நமக்குள் இருக்கும் பாலைவனங்களை, அதாவது, கடவுள் மீதும் நம் அயலார் மீதும் அன்பின்றி செயல்படும்போது, கடவுள் நமக்குத் தந்த மற்றும் தந்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் பாதுகாக்க வேண்டியவர்கள் நாம் என்பதை உணராமல் செயல்படும்போது கடவுளின் கருணை என்பது வறண்ட நிலங்களையும் பூந்தோட்டங்களாக மாற்றவல்லது. உலர்ந்துபோன எலும்புகளுக்கும் உயிரூட்ட வல்லது (எ.ச. 37: 1-14) எனவே கிறிஸ்துவின் உயிர்ப்பு அருளை நாம் ஏற்றுக்கொள்வோம் என்பதே நான் இன்று உங்களுக்கு விடுக்கும் அழைப்பு. நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். மேலும், இக்கருணையை மக்களுக்குக் கொணரும் இணைப்பாளராவோம். நம் வழியாக இறைவன் இவ்வுலகிற்கு நீருற்றி, இவ்வுலகின் படப்புகளனைத்தையும் பாதுகாத்து, நீதியும் அமைதியும் செழிக்கச் செய்வாராக.

சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிக்கவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். ஆம் கிறிஸ்துவே நம் அமைதி. அவர் வழியாகவே, இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க நாம் இறைஞ்சுகின்றோம். மத்தியக் கிழக்குப் பகுதிக்காக, குறிப்பாக, இணக்கத்தின் பாதையைக் கண்டு கொள்ள முயலும் ஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதி நிலவ பலகாலமாக தொடர்ந்து வரும் சண்டைகள் நிறுத்தபடுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும் மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட ஈராக்கின் அமைதிக்காக, அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு நிறை சிரியா நாட்டிற்காக, அங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மற்றும் உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காக, எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் நெருக்கடிகளுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படுவதற்குமுன் இன்னும் எவ்வளவு துன்பங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்?

இன்னும் வன்முறை மோதல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கு அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும் நிலையாக தன்மையும் கொணரப்படட்டும். வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணையக் கைதிளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு மிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் வகையில் தாக்குதல்கள் தொடரும் நைஜீரியாவில் அமைதி திரும்பட்டும். மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி, காங்கோ குடியரசின் கிழக்குப்பகுதியில் அமைதி திரும்பட்டும்.

ஆசியாவில் குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும்.இங்கு கருத்துமோதல்கள் வெற்றிகாணப்பட்டு ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளர்வதாக. மேலும் உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, மார்ச் 31 ம் தேதி திருத்தந்தை பிரான்சிறு வழங்கிய ட்விட்டர் செய்தி இதோ : உயிர்த்த இயேசுவை உங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவரிடமிருந்து நீங்கள் அதிக தூரம் விகியிருந்தால், அவரை நோக்கி வாருங்கள். உங்களை அரவணைக்க விரிந்த கரங்களுடன் அவர் காத்திருக்கிறார்.

-ஆதாரம்வத்திக்கான் வானொலி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரியன்னையின் தூய இதயம் தரும் செய்திகள்


மரியன்னையின் தூய இதயமும், இயேசுவின் திரு இதயமும் ஒன்றே. இயேசுவின் இதயம் அனுபவிக்கும் உணர்வுகளையும், வேதனைகளையும் மரியன்னையின் இதயமும் அனுபவித்தது என்பது முற்றுலும் உண்மையே! பாத்திமா செய்தியின் கருப்பொருளும், மிக முக்கியமான பகுதியும் எதுவென்றால், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மரியன்னையின் மாசற்ற இதய பக்தி, இயேசுவின் திரு இதய பக்தியோடு இணைக்கப்பட்டது. இயேசுவினுடையவும், மரியன்னையினுடையவும் தூய இதயங்கள் பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இணைந்திருக்கின்ற அவர்களின் தூய இதயங்களின் ஆட்சியும், உலகார்ந்த வெற்றியும்தான் விண்ணகத் தந்தையின் மாபெரும் திட்டமாகும்.பாத்திமாவில் அன்னைகூறும் வியத்தகு செய்திகள் நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டவை.

ஜூன், 13, 1917 புதன்கிழமை காட்சியில் மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா காண்கிறார்கள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு ஜெபமாலை செபித்தபின் லூசியாவிடம், ‘நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கு இருக்க வேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும் படி உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார். உலகில் என் மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி,இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன். என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும், கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும் வழியாகவும் இருக்கும்.’ என்று அன்னை கூறினார்கள். அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது. மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின பாவங்களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின் தூய இதயம் தான் அது.

ஜூலை 13ல் அன்னை,’ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள் செய்யுபோது, ‘ஓ! இயேசுவே’ உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இதைச் செய்கிறேன் என்று சொல்லும்படிக் கூறினார்கள். 
ரஷ்யாவைஎன்மாசற்றஇதயத்திற்குஒப்புக்கொடுக்கவும்,கேட்டுக் கொண்டார்கள். பலவிதமான துன்பம்,சோதனைகள், வேதகலாபனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் என் மாசற்ற இதயம் வெற்றிபெறும்.’ என்றுக்கூறினார்கள். நம்பிக்கை நிரம்பிய மென்மையான வார்த்தைகளின் வழியாக தமது மாசற்ற இதயத்திற்கான வழியைத் திறந்து வைத்து, மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி, பாவிகளின் மீட்பிற்காக மரியன்னையின் தூய இதயத்திடம் தஞ்சமடையவும் கேட்டுக் கொண்டார்கள். ம்ரியன்னையின் தூய இதயத்திற்கு ஆறுதலளிக்க முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரிப்பவர்களுக்கு விண்ணகத் தந்தை மீட்பை வாக்களித்துரைக்கிறார். அவர்கள் கடவுளின் மகிமையாசனத்தை அலங்கரிக்க வைக்கப்படும் மலர்களைப்போல நேசிக்கப்படுவார்கள்.

முதல் சனிக்கிழமைகள் செய்ய வேண்டியவைகள்
1.ஒப்புரவு அருட்சாதனம் 2. பரிகார நன்மை உட்கொள்ளுதல்
3. 53 மணி ஜெபமாலை ஜெபிப்பது
4. ஜெபமாலை இரகசியங்களைத் தியானித்தல்

அருட்திரு ஸ்தெபனோ கோபியிடம் நம் அன்னை பேசும்போது, தன் மாசற்ற இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும், அடைக்கலமாகவும, பாதுகாப்பாகவும் தன் இதயம் எபபோதும் இருப்பதாகவும், தங்களையே அர்ப்பணிக்கவும் கூறுகிறார்கள். மரியன்னையின் தூய இதயத்துக்கு தன்னை முழுவதும் ஒப்புக் கொடுக்கும் ஜெபம் (புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்)

ஓ! அமலோற்பவத்தாயே! இதோ! பாவியாகிய (பெயர்) ஞானஸ்நானத்தில் கொடுத்த வார்த்தைப் பாட்டை உமது கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறறேன். பசாசையும், அதன் கிரிகைகளையும், ஆரவாரங்களையும் நான் விட்டு விடுகிறேன். நித்திய ஞானமாகிய இயேசுக் கிறிஸ்துவுக்கு என்னை முழுவதும் கையளித்து என் ஜீவிய கால முழுவதும் எனக்கு நேரிடும் துன்பங்களையும் அவருடைய பாடுகளோடு ஒன்றித்து முன்னைவிட இன்னும் அவருக்கு அதிக பிரமாணிக்கமாய் இருப்பதாக வாக்களிக்கிறேன். சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், என் எல்லாவற்றையும், என் உள்ளிந்திரியங்களையும், ஐம்புலன்களையும், என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரிகைகளையும், பலன்களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னையும், எனக்குச் சொந்தமான யாவற்றையும் இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிகத் தோத்திரத்திற்காக உமது பிரியம்படி நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது அருமையானவர்களே!


தந்தை பியோ அன்னை மரியை அளவு கடந்த அன்பு செய்தார். அவர் எப்பொழுதும் தொடர்ந்து ஜெபமாலையை ஜெபித்துக் கொண்டிருப்பார். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவர் சிறப்பானதொரு பணி செய்தார். அவர்களுக்காக ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டுமென தூண்டுவார். ‘‘நமது ஜெபத்தினால் நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை காலி செய்ய வேண்டும்” என்று சொல்வார். அவருடைய ஆன்மீக குழந்தைகளுக்கு அவர் விட்டு செல்லும் சொத்து என்ன என கேட்டபொழுது, தந்தை பியோவின் பதில் ‘‘குழந்தாய், ஜெபமாலை தான்” என்பார். ஆம், தந்தை பியோ தன் ஆன்மீக குழந்தைகளுக்கு விட்டுச் சென்ற தனிப்பெறும் சொத்து ஜெபமாலைதான். ஜெபமாலையை பணம் கொடுத்து வாங்கலாம் விற்கலாம். ஆனால் நாம் ஜெபிக்கின்ற ஜெபமாலையோ விலைமதிக்க முடியாதது. பார்ப்பதற்கு சாதாரணமானது. ஜெபித்து பழகியவர்களுக்கு அற்புதமானது, ஆனந்தமானது. இவ்வுலகில் உள்ள விலையுயர்ந்த முத்துக்களை விட மிக உயர்ந்தது. அதற்கு ஈடு இணை வேறொன்றுமில்லை. ஜெபிக்க, தியானிக்க எளிமையானது. கடுகளவு நம்பிக்கையுள்ளவர்களுக்கும், மலையளவு இடர்களையும் தகர்த்தெரியும் ஆற்றல் உண்டு. 20 நிமிடம் ஆழ்ந்து தியானித்து ஆண்டவரின் மீட்பு வரலாற்றில் இணைந்து இருந்தாலே மனதில் அமைதியும் பக்குவமும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிட்டும். இவ்வுலகின் பகைவனையும் வெல்லலாம். தந்தை பியோவே இதற்கு ஒரு சிறந்த மாதிரி ஆவார்.

அன்பானவர்களே, கோடைகாலம் வந்து விட்டது. கோடை மலர்கள் அழகாக பூத்து குலுங்கி சிரிக்க தொடங்கிவிட்டது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு முகத்தில் புன்னகைப் பூக்க அன்னையை போற்றி ஜெபமாலையை கையில் ஏந்தி ஜெபிக்கலாமே! அன்னை மரியை போற்றி மகிழும் கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவுக்குள் வாழ்கிறார்கள். இயேசுவை சுமந்த தாய் நம்மையும் இயேசுவிடத்தில சுமந்து செல்கிறாள். பிள்ளையை அனாதையாக்கி செல்லும் தாயல்ல. எந்நாளும் உடனிருந்து இயேசுவிடம் அழைத்துச் செல்லும் தாய்தான் மரியா. உயிர்த்த இயேசு அப்பத்தைப் பிட்டபோது எம்மாவுஸ் சீடர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று நற்கருணை ஆண்டவரில் ஒன்றித்திருப்பது அன்னைக்கு நாம் கொடுக்கும் மாபெரும் மகிழ்ச்சி ஆகும். வருகிற மே மாதம் 25 ஆம் நாள் தந்தை பியோவுக்கு 126 வது பிறந்த நாள். இந்த உலகிலே அவரை அவதரிக்க செய்து மிகவும் அருமை யான கையில் பயன்படுத்திய இறைவனை புகழ்வோம். ஜூன் மாதம் 16 ஆம் நாள் தந்தை பியோ புனிதராக உயர்த்தப்பட்ட 11 வது ஆண்டு. புனிதரின் வழியாக இறைவன் புரியும் நற்செயல்களுக்கு ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்வோம். அன்றைய தினம் உலகில் உள்ள அனைத்து குருக்களுக்காகவும் ஜெபியுங்கள். 

புதிதாக நமக்கு கிடைத்துள்ள 266 ஆவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக தினந்தோறும் ஜெபிப்போம். நம் ஆன்மீக குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரையும் அன்னையிடம் ஒப்படைத்து ஜெபிப்போம் பலப்படுத்துவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான ஆசீர். மரியே வாழ்க. !

அருட்தந்தை அ. செல்வராஜ் க.ச

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றியறிதல்


ஆலன் கெல்லர் என்னும் நான் தஞ்சையில் (B.E.) படித்து முடித்தேன். பிறகு M.E. க்கு படிவம் விண்ணப்பித்தேன். என் அப்பா என் சித்தியிடம் ஆலனுக்காக ஜெபம் பண்ணிக்கோ என்றார்கள். என் சித்தியும் ஜெபித்தார்கள். அவர்களது கருத்து நிறைவேறினால் பியோ இதழில் சாட்சி எழுதுவதாக சொன்னார்கள். சரி என்றேன். நாங்களும் வேண்டினோம். படிக்க கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. தற்போது நான் சென்னையில் படித்து வருகிறேன். எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தந்த தந்தை பியோவிற்கு நன்றி.

இப்படிக்கு

J. ஆலன் கெல்லர், 
புதுக்கோட்டை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம் - 2


எனக்கு 2012 ஆம் வருடம் செப்டம்டர் மாதம் 4 தேதி இருதயத்தில் (மாரடைப்பு) ஏற்பட்டு, மிகவும் மோசமான நிலையில் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடனடியாக இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இருதயத்தில் 4 அடைப்பு உள்ளதாகவும் கூறினார்கள். இரண்டரை லட்சம் உடனடியாக கட்டவும், டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். மகளின் திருமணம் ஒருபக்கம். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில், நான் மாதாவிடமும், இயேசுவிடமும் எனக்கு புது இதயத்தை தரவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக வேண்டும், (பியோ) தந்தையிடம் வேண்டினேன். தங்களின் பரிந்துரையால் எனக்கு பூரண நலம் கிடைக்கவும், ஜெபமாலையை காலை மாலை என்று விடாமல் ஜெபம் செய்தேன். என்ன ஆச்சரியம் என்றால் என்னை பரிசோதித்த டாக்டர் அவர்கள் அடைப்புகள் சரியாகி விட்டதாகவும், தாங்கள் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். மேலும் மருந்தும், ஓய்வும் அவசியம் என்றார்கள். பியோ தந்தையிடம் என்னால் முடிந்தளவு பியோ தந்தையின் மாதா ஜெபமாலையைப் பரப்புவேன் என்று வேண்டினேன். பூரண நலமடைந்துள்ளேன். இனி எம் நலமுடனிருக்க இறை மகனான இயேசுவிடம், மாதாவிடமும், ஜெபிக்கிறேன். எனது சாட்சியை வெளிப்படுத்துவதால் தந்தையிடம் வேண்டினேன். நன்றி தந்தையே. இயேசுவிற்கே புகழ் ! மாதாவுக்கே எனது அன்பு நன்றிகள்!

இப்படிக்கு

டல்சிடிக்ரூஸ் 
(கோவை)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம் - 1

என் பெயர் ரமேஷ் பெர்னாண்டோ தூத்துக்குடியில் வாழ்ந்து வருகின்றேன். திருமணமாகி மனைவி, 2 பெண்மக்கள் உள்ளனர். கடந்த முறை கண் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கண் பார்வை நரம்புகள் மிகவும் பலவீனமாக உள்ளதால் வெளியில் எங்கும் செல்லக் கூடாது, வேலைகள் எதுவும் செய்யக் கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். மிகவும் மனமுடைந்து, விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டேன். நொறுங்கிப் போனேன். என் மனைவி மறைமாவட்டத்தில் பணி செய்வதால் மற்ற வேலைகளை நான்தான் செய்ய வேண்டும். வெறும் ஜடமாக வாழ்வது வீண் என எண்ணி வேதனையில் மூழ்கிய நான் புனித தந்தை பியோவின் உதவியை வேண்டி அவர் பாதங்களில் வீழ்ந்தேன். உருக்கமாக கண்ணீரோடு மன்றாடி நவநாள் ஜெபம் சொல்லி வந்தேன். சகோதரி ராணி ஜெகதிஸ் அவர்களிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னபொழுது ஆறுதல் கூறி எனக்காக அவர்களும் மன்றாடினார்கள். என்ன ஆச்சரியம் கண்களில் இருந்த இருள் நீங்கி கண் வெளிச்சம் கிடைத்து தற்சமயம் வெளியில் அதுவும் இரவிலும் சென்று எல்லா வேலைக ளையும் செய்து வருகிறேன். என் கண்ணீரை துடைத்து என் வேண்டுதல் கேட்டு இறை இயேசுவிடம் பரிந்து பேசிய புனித தந்தை பியோவுக்கு கோடான கோடி நன்றியை அவரது மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். இறை இயேசுவுக்கும் அன்னை மரிக்கும் நன்றி. புனித தந்தை பியோ புகழ் எங்கும் பரவ எங்களால் முடிந்த மட்டும் உழைப்போம்.புனித தந்தை பியோவை‘நம்புங்கள் நல்லதே நடக்கும்’. 

–ஜெனோ ரமேஷ் குடும்பத்தினர்
தூத்துக்குடி-01


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS