1. திருவிழா திருப்பலிக்கு தலைமை ஏற்று சிறப்புக்கும் அருட்தந்தை அகஸ்டின் நியூட்டன் எம் அமல் அன்னை கப்புச்சின் மறை மாநில துணை அதிபர் பிரான்சிஸ்கோ இறையியல் கல்லூரியின் அதிபர் - நன்றிகள்
மற்றும் இவ்விழா திருப்பலியில் கலந்து கொண்ட அருட்தந்தையர்கள் மற்றும் பிரான்சிஸ்கோ இறையியல் கல்லூரி குரு மாணவர்கள் மற்றும் பீட சிறுவர்கள்
2. இன்றைய சிறப்பு நற்கருணை ஆராதனை வழிபாட்டை நடத்தி அருள் பெற்று கொடுத்த விரகாலூர் அருட்தந்தை ஜான்சன்
3. இந்த மூன்று நாட்கள் விழா நிகழ்வுகள் சிறப்பு அமைய உதவிய பேருள்ளம் கொண்ட அனைத்து உபகாரிகளுக்கும் நன்றிகளும் ஜெபங்களும்.
4. தந்தை பியோவின் திருவிழாவுக்காக அனைத்து வேலைகளையும் தம்மீது சுமந்து கொண்டு ஓடி ஓடி உழைத்த புனித பியோ ஜெபமாலை இயக்க தேசிய பணியாளர்களான சகோதரர்கள் அந்தோணி ஜோசப், பிரவேந்திரன், infant, ஆணி அம்மா, சூசை மாணிக்கம், சார்லஸ் கிறிஸ்டி மற்றும் ஜேக்கப் மற்றும் பல ஊர்களிலும் இருந்து வந்த தல பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
🌹 பல ஊர்களில் இருந்து புனித பியோ ஜெபமாலை இயக்க உறுப்பினர்களை வழிநடத்தி இந்த திருவிழாவில் பங்கு கொள்ள ஏற்பாடுகள் செய்து உடன் இருந்த தல பணியாளர்கள் அனைவருக்கும், கன்னியாகுமரியில் இருந்து வந்திருக்கும் அருட் சகோதரி ஜோஸ்பின் மொராய்ஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்
5. இந்த நாட்களில் வழிபாடுகள் சிறப்புற அமைய இனிமையாக பாடல்கள் பாடிய சகோதரர் லியோ மற்றும் குழுவினருக்கு எமது அன்பான நன்றிகள்.
6. இந்த நாட்களில் புனித பியோ திருவிழா சிறப்பாக நடப்பதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய அமலாசிரமம் எமது கப்புச்சின் துறவிகள் அனைவருக்கும் குறிப்பாக அகுஸ்டின் பங்குத்தந்தை ராயப்பன் பொருளர் தந்தை லியோ அமலநாதன் மற்றும் உறைவிடம் வழங்கிய ரொசாரியோ ஆகியோருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
7. இன்றைய திருவிழா திருப்பலியை மாதா டிவி ஒளிபரப்புக்காக ஒளிப்பதிவு செய்த நமது கும்பகோணம் மறை மாவட்ட பெஸ்கி கலைத்தொடர்பாக அன்பர்கள் அருட்தந்தை ராஜமாணிக்கம் மற்றும் அவரது குழுவினர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
இன்று ஒலிப்பதிவு செய்யப்படும் இந்த திருப்பலியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு மாதா டிவியில் ஒளிபரப்பப்படும். எல்லோருக்கும் தெரிவிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
8. இந்த நாட்களில்வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்த இவ்வாலய பணியாளர் திரு அமல்ராஜ், தேநீர் செய்து கொடுத்த சமையலறை பணியாளர்கள் மேலும் உதவிகள் செய்த காவல் பணியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள்.
9. பிரிண்டிங் வேலைகளை செய்து கொடுத்த திரு அருள்ராஜ், மலர் அலங்காரம் செய்த திரு செபாஸ்டின் குழுவினர் மற்றும் சுவையான உணவை சமைத்து வழங்கிய திரு சேதுராமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.