ஜெபமாலையின் மேன்மை

ஜெபமாலை என்பது நம் ஆன்மா சுத்திகரிக்கும் ஓர் ‘‘அன்பின் கருவி’’ அன்னை மரியாள் ஓர் அன்பின் பிறப்பிடம். எனவேதான்  இறைவன் தன் மகனை பெற்றெடுக்கும் ‘‘ஓர் பெட்டகமாக’’ அன்னையை உருவாக்குகிறார். அன்னை மரியாள் எளிமையாக தன் வாழ்வை உருவாக்கி இறைவனாக தன்னில் உருவெடுக்க தன் உதிரத்தை தூய்மையாக்கியவள் என்பதை உணர்த்துகிறது. ஜெபமாலையில் அன்னை மரியாளுக்கு கபிரியேல் வானதூதர் ‘‘மகிழ்ச்சியான ஓர் செய்தியை’’ சொல்கிறார். அன்னை மரியாள் எலிசபெத் அம்மாவை சந்தித்து ‘மகிழ்ச்சியை பகிர்ந்து’’ கொள்கிறார். இறை மகனின் பிறப்பு இடையர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியில்  அறிவிக்கப்படுகிறது. இறை மகன்  இயேசு தன் 12 வது வயதினில் தன் தந்தையின் விருப்பம் என்ன? என்பதை அறிந்தவராய் சட்ட வல்லுநர்கள். பரிசேயர் சதுசேயர் அறிஞர்கள், மூப்பர்கள் மத்தியில் ‘‘இறைவார்த்தை மகிழ்ச்சியோடு விளக்கிக் கூறுகிறார். காணமாமல் போன தன் மகனை அலைந்து திரிந்து சோர்ந்து தேடிய தாய் தன் மகனை ஆலயத்தில் கண்டு அவர் விளக்கிக் கூறிக்கொண்டிருப்பதை உணர்ந்தவராய் பெருமகிழ்ச்சி அடைகிறார், இவ்வாறு ஜெபமாலை என்பதை நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லும்போது எல்லையில்லா ஆனந்தத்தை பெறுகிறோம்.
நாமும் நம்மை காக்கின்ற தெய்வம் எளிமையும் தூய்மையுமானவர் என்பதை அன்னை மரியாவைக் கண்டு அறிந்து தெளிந்த சிந்தனை கொள்வோம்.
உச்சியிலே நீ இருந்த -தாய்
உதிரத்தை பாலாக்கி
பக்தியிலே எமை வளர்த்து
சக்தியாய் நிற்பவளே
முக்தியை அடைந்திட முனைவோர்க்கு
முழுவதும் தன்னை தருபவளே  அன்னையே
இவ்வையத்தில் என்னை ஜனனம் பெற செய்தவளே
இச்சாம்ராஜ்யத்தில் நான் என் வழிதொடர
‘ஜெபமாலை என்னும் அருட்கருவியை’
தந்தவளே உம்மை போற்றுகிறேன். 
கிறிஸ்து பிறப்பு உலக மாந்தர்க்கே சிறப்பு’’ 
கிறிஸ்து உணர்த்தும் உன்னத கருவியை ‘தந்தவளே’
தாயே உம்மை போற்றுகிறேன்
ஜெபமாலை செய்வோம்
செம்மையான வாழ்வு வாழ்ந்து
இவ்வையத்தை  வெல்வோம்.
ஜெபமாலையை அருட்கருவியாய் கொண்டு
அவனியில் அமைதியை வளர்ப்போம்.

 S.கரோலின்மேரி  FIHM
திருக்கானூர்பட்டி
தஞ்சாவூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக