அன்றாட வாழ்விற்காக புனித தந்தை பியோவின் ஆன்மீக வழிகாட்டுதல் ( கடிதங்கள் வழியாக)

தந்தை பியோவின் ஆலோசனைகள் ஆழமானவை. பொறுக்க இயலாத மன வேதனைகளைத் தாங்கிக் கொண்ட இயேசு நம்மை எவ்வாறு மீட்பிற்கு வழி நடத்துகிறார் என்று அவர் வழியாக அறிந்து கொண்டோம். இயேசுவின் மீட்பை நாம் ஏற்க மறுப்பதனால் நன்றி கெட்டதனத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதனால் நன்றியுடையவராக இருத்தல் அவசியம். எதிலுமே கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம். கிறிஸ்துவின் பாடுகளில் நாமும் பங்கு பெறும்பொருட்டு நம் இழிவுணர்ச்சிகளையும் இச்சைகளையும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டோம் என்றால் மீட்பு பெற தகுதி பெற்றவர்களாவோம். இயேசுவின் பாடுகளை உடலில் ஐம்பது ஆண்டுகளாக தாங்கினவரான புனித பியோவின் போதனைகளைப் போன்று ஆழமான போதனைகளைப் பெற்றுகொள்வது எளிதல்ல, அதை புரிந்து கொள்வதும் கடினமாகவே உள்ளது.
சிந்தனை 2/23 :  இறுமாப்பு  குறித்து எச்சரிக்கை.

ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கும், ஆன்மீக வாழ்விற்கு கையளித்தவர்களது ஆன்மாவிற்கும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமை அல்லது இறுமாப்பு உண்மையான எதிரியாக இருக்கிறது. அதன் காரணமாகவே, முழு நிறைவை இலட்சியமாகக் கொண்ட எந்த ஆன்மாவையும் அழித்துவிடும் புழு என்று அதனை சரியாக அழைத்துள்ளாளர்கள்.
இறுமாப்பு எவ்வாறு முழு நிறைவிற்கு எதிரானது என்பதனை இவ்வாறு விளக்கலாம். பேய்களுக்குக் கட்டளையிட்டபோது அவை கீழ்ப்படிந்ததைக் கண்ட சீடர்கள் முழுநிறைவோடும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமையோடும் இருப்பதைப் பார்த்த இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்  (லூக் 10 : 20) என்றார்.
அவர்களது மனதிலிருந்து வெளிப்பட்ட, சாபத்துக்கு ஆளாக்குகிற தீமையின் தீய பாதிப்புகளை வேரோடு பிடுங்கி விடுவதற்காக அவர்கள் மனதில் நயம்பட புகுவதில் வெற்றி பெற்றுவிடாதிருக்க, லூசிபரை கடவுள் உயர்த்தி வைத்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்துகாட்டாகச் சொல்லி அவர்களை அவர் நடுக்கமுறச் செய்தார். தான் பெற்ற கொடைகளால் இறுமாப்பு அடைந்ததன் காரணமாக விழுந்ததைச் சொன்னார். ‘வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்.’ (லூக்கா 10 : 18 ) என்றார்.
இந்த தீமை அதிகம் அஞ்சுதற்குரியது, ஏனெனில் அதை எதிர்க்க சரியான எதிர்மதிப்பீடு (virtue to counter) ஒன்றும் இல்லை. ஏனைய எல்லா தீமையையும் எதிர்க்கக் கூடிய சரியான எதிர்மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. கோபம் அதற்கு  எதிரான பொறுமையால் மேற்கொள்ளப்படுகிறது. பொறாமை கொள்வது (envy) இரக்கச்செயல் (Charity) வழியாக, பெருமை தாழ்ச்சி வழியாக இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் மாற்று மதிப்பீடுகள் உண்டு. சுயஇறுமாப்பு அல்லது ஆணவத்திற்கு மாத்திரம் நேரடியாக அதை எதிர்க்கும் படியான மதிப்பீடு கிடையாது செயல்களிலெல்லாம் புனிதமானவற்றிலும் அது மெல்லியதாக ஊடுருவி விடுகிறது. மேலும் அதை அடையாளம் காண இயலாது. அது செருக்குடன் தாழ்ச்சிலும் தனது கூடாரத்தை அடித்துக் கொள்கிறது.
 ((To Fr,agotino of san marco in lamis aug 2, 1913).

சிந்தனை 2/24 :  பாவங்களை அல்ல, சுய இறுமாப்பை மேற்கொள்பவர்களையே சாத்தான் சோதிக்கிறான்.
(இந்த கடிதங்கள் அருட்தந்தை அகுஸ்தினோ யாமிலில் உள்ள சான்மார்கோவைச் சார்ந்தவருக்கு ஆகஸ்டு 2, 1913 அன்று எழுதியது)
அன்பான தந்தையே! காமவெறி கொண்ட ஒரு நபர், மனப்பேராசை கொண்ட ஒரு நபர், ஒரு பாவி இத்தகையோர் பெருமைப்பட்டு கொள்வதைவிட அதிகமாக குழப்பம் அடைந்தவராகவும், அவமானத்தால் முகம் சிவந்தவராகவும் இருக்க வேண்டும் என்று சாத்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அவன், சுய இறுமாப்பினால் அவர்களைச் சோதிப்பதைத் தவிர்த்து விடுகிறான். இத்தகைய போராட்டத்தில் அவர்களுக்கு சாத்தான் ஊறு விளைவிக்காதிருந்தாலும் நல்ல மக்களை அதிலும் நிறைவு பெற்றவர்களாய் வாழும் குறிக்கோளாகக் கொண்டவர்களை அவன் காயப்படுத்தாமல் விட்டு வைப்பதில்லை.
ஏனைய தீய ஒழுக்கங்கள், யாரெல்லாம் அந்த தீய ஒழுக்கங்களால் மேற்கொள்ளவும், அதிகாரம் செலுத்தவும் அனுமதிக்கிறார்களோ அவர்களை மட்டுமே வெற்றி கொள்கின்றான். எப்படியிருந்தாலும் சுய இறுமாப்பானது அதனோடு  போராடி அதனை மேற்கொள்ளும் மக்களுக்கு மட்டுமே எதிராக அதன் தலையை உயர்த்துகிறது. இறுமாப்பின் மீது வெற்றி கொண்டவர்களுக்கு எதிராகப் போராடி, அவர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்து விடும்படியாக இறுமாப்பு செயல்படுகிறது. ஒரு போதும் களைப்படையாத எதிரி அது. மேலும் நம் எல்லா செயல்களிலும் அது நமக்கு எதிராகப் போர் தொடுக்கிறது. நாம் அது இருப்பதை உணராவிட்டால் நாம் அதன் ‘பலியாள்’ ஆகிவிடுவோம்.
இதன் காரணமாக மற்றவர்களுடைய புகழ்ச்சியிலுருந்து ஓடி விடுகிறோம். திறந்த வெளியில்  உபவாசம் இருப்பதைவிட பிறர் அறியாமல் மறைவான இடங்களில் உபவாசம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். திற மையான பேச்சைவிட அமைதியையும் முக்கியமாகக் கருதப்படுவதைவிட ஏளனத்திற் குள்ளாவதையும், புகழ் பெறுவதை விட அவமதிப்ப்புக்குள்ளாவதையும் நாம் விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம். அந்தோ, என் கடவுளே, இவ்வாறு காரியங்களை நாம் செய்தாலும், அவர்கள் சொல்லுவதுபோல, சுய-இறுமாப்பு (ளுநடக- ஊடிnஉநவை) அதனுடைய மூக்கை உள்ளே நுழைக்க விரும்புகிறது. மேலும் சுய திருப்தியினால் நம்மைத் தாக்குகிறது.

சிந்தனை 2/25 :  சுய இறுமாப்பை நுழைய விட வேண்டாம். அது நம்மை சேதப்படுத்திவிடும்.
புனித ஜெரோம் சுய இறுமாப்பை ஒரு நிழலுக்கு ஒப்பிடுவது சரியே, ஏனென்றால் ஒரு நிழலானது. அதன் உடல் எங்கு சென்றாலும் அதன் பின்னால் செல்கிறது. அதன் அசைவுகளை அப்படியே திரும்பச் செய்கிறது உடல் ஓடும்போது அதன் நிழலும் தொடர்ந்து ஓடுகிறது. ஏதோ ஒருவர் மெதுவாக சிறுசிறு அடிகளை எடுத்து நடந்து சென்றால் அந்த அடிகளை நிழலும் உறுதி செய்கிறது. ஒரு நபர் உட்கார்ந்தால் அதுவும் அதே வடிவமைப்பையே எடுத்துக் கொள்கிறது.
அதுபோலவே, சுய இறுமாப்பும் நல்லொழுக்கமும் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து செல்லுகிறது. உடல் அதன் நிழலை விட்டு ஒடுவதால் பயன் ஒன்றும் இருக்காது. ஏனென்றால், நிழல் எப்பொழுதும் எங்கும் உடலைத் தொடர்ந்து தான் செல்லும் அதனை விட்டு விலகாதிருக்கும். அது போலவே, யாரெல்லாம் உயர் மதிப்பீடுகளையும் நிறைவையும்  குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையும் சுய இறுமாப்பு தொடர்கிறது. சுய நிறை வைக் கண்டுகொள்ள ஓடும் போதெல்லாம், அது நிழலைப்போல நெருக்கமாக பின்னாலே ஓடிகின்றது.
எனவே எப்பொழுதும் நாம் விழிப்போடிருப்போம். இந்த அஞ்சத்தக்க எதிரி நமது மனங்களுக்குள்ளும் இதயங்களுக்குள்ளும் நுழைந்து, அதன் வழியாக நம்முள் நுழைய அனுமதிக்க வேண்டாம் ஏனென்றால், ஒரு முறை அது நுழைந்தால், அது நமது எல்லா ஒழுக்கப்பண்புகளையும் நாசப்படுதுதம்.
 எல்லா புனித தன்மையையும் கெடுத்துவிடும். எதெல்லாம் நல்லதாகவும் அழகாகவும் இருக்கிறதோ அவற்றையெல்லாம் களங்கப்படுத்துகிறது.
(கூடி குச. ஹபடிவinடி டிக ளுயn ஆயசஉடி in டுயஅளை ஹரப 2, 1913)
அன்பு தந்தை புனித பியோ, அருட்தந்தை அகுஸ்தினோவிற்கு எழுதிய கடிதங்களில் இருந்து இறுமாப்பு குறித்த மிக முக்கியமான தகவல்களை வாசித்தோம். இறுமாப்பைக் குறித்த எச்சரிக்கையை இதயத்தில் பதிப்போம்.
1. புனிதத்தை சேதப்படுத்தும் புழு போன்றது இறுமாப்பு (வீண் பெருமை)
2. லூசிபர் இறுமாப்பினால் வீழ்ந்ததை மனதில் நிறுத்தி, தீய ஆவிகள் அடிபணிவதற்காக மகிழ வேண்டாம் என்று சீடர்களிடம் சொன்னார்.
3. சுய இறுமாப்பிற்கு மாத்திரம் நேரடியாக எதிர்க்கின்ற மதிப்பீடு இல்லை.
4. பாவிகளை, பலவீனர்களை சாத்தான் சுய இறுமாப்பினால் சோதிப்பதில்லை, மாறாக சுய இறுமாப்பை வென்றவர்களையே சோதிக்கிறான்.
5. சாத்தான் நம்மை சோதிப்பதை அறியாவிட்டால் நாம் அதற்குப் பலியாள் ஆகிவிடுவோம்.
6. நல்லொழுக்கமுள்ளவர்களை சுய இறுமாப்பு நிழல்போல் தொடருகிறது. எனவே விழிப்போடிருந்து அது உள்ளே நுழைவதைத் தடுக்கா விட்டால் நம் புனிதத் தன்மையை இல்லாதாக்கிவடும். 
அதனால் தான் நீதிமொழி
‘‘அழிவுக்கு முந்தியது அகந்தை
வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை’’ (நீ.மொ 16 : 18)
என்று எச்சரிக்கிறது. எச்சரிக்கையுடன் உஷாராவோம். இறுமாப்பிலிருந்து காத்துக் கொள்வோம். 
இந்த 5 சிந்தனைகளையும் வாசித்தபிறகு ஏதாவது ஒரு சிந்தனையையாவது மனதில் நிறுத்தி செயல்படுத்த வேண்டும். இந்த இதழிலே சிலுவையை ஏற்கும் பண்பை வலியுறுத்தி கடவுளின் திருவுளப்படி நடக்கவும் ஊனியல்பின் வேரை எடுத்து மாற்றி சிலுவையில் இச்சைகளை அறைந்துவிடவும் இறுமாப்பை களைந்து தாழ்ச்சியோடு செயல்படவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தந்தை பியோவின் சிந்தனை வழியாக அவர் என்ன செய்தி சொல்ல விரும்புகிறாரோ அது மாத்திரம் சென்று சேர வேண்டுமே என்ற ஏக்கத்தோடு இந்தப் பக்தியை எழுதுகிறேன். இதை வாசிக்கும்போது அவரின் ஆன்மா, ஆவியின் ஆற்றலோடு நீங்களும் வாசித்து தியானித்து வாழ்வாக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

தொடரும்....

திருமதி இம்மாகுலேட் பிலிப், 
நாகர்கோவில

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக