அன்னையின் சங்கமம்


ஆதவனின் பொன் கீற்றுகளால் பின்னப்பட்டு பால்
ஒளியால் நிரப்பப்பட்டு நட்சத்திரப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
அழகு மிளிர்ந்த ஆன்மாவை அன்பரின் அருளால் நிரப்ப
ஆண்டவனையே கருத்தாங்கிய கன்னி இவள்

ஆரவாரமில்லா அமைதியில் இறையனுபவத்தைப் பெற்று
அனைவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும் கன்னியாய்
தரணியர் போற்றும் தாயாய் சீர்திருத்தவாதியாய்
தாராள உள்ளத்தோடு பிறரன்புப் பணியில் ஈடுபாடு கொண்ட தாயவள்

தன்னிகரில்லா அருட்கன்னியாய் அரசாட்சி புரிபவள்
காற்றை சுவாசிப்போர்க்கு மணமாகவும் சுகமாகவும் இருக்கும்
காற்றுக்கு உருவம் உண்டோ இல்லையோ- ஆனால்
அன்னை மரியளுக்கு என்றும் ஆண்டவனின் அருளுண்டு

இறைவன் கொடுத்த கனிஇவள் இறைமக்களால் சுவைக்கப்படுபவள்
பார் போற்றும் பாவை இவள் பரலோகப் பிதாவின் பக்தை இவள்
இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து இறைமக்களை மனத்தில் சுமந்து
இறைவழியில் என்றும் நாம் வாழ ஜெபிப்பவள் நம் அன்னை

தொடர் சந்திப்பு நெருக்கத்தை உருவாக்கும்
அருகாமை நெருக்கத்தை  வளர்த்தெடுக்கும்
உடனிருப்பு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
இறைவனின் நெருக்கம் என்றும் நமக்கு ஆசியைப் பெற்றுத்தரும்

உம் வழியில் யாம் நடக்க உம் மகளாய் (மகனாய்)
யாம் மாறிட நிலம் பிளந்து உள்செல்லும் மழையாய்
இருள் கிழித்து ஊடுருவும் ஒளியாய் எம்முள்
உம் அருள் வேண்டும் உம்ஆசீர் எமை ஆள வேண்டும்  அன்னையே

கிறிஸ்துவில் பிரிய
சகோ. ஆலிஸ் (ரெஜி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக